செய்திகள்

துருக்கியின் புதிய யுகத்தில் அனைத்துத் துறைகளையும் விருத்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி தெரிவிப்பு

துருக்கியின் தற்போதைய புதிய யுகத்தில் அனைத்துத் துறைகளும் விருத்தி காணும் என்று அந்நாட்டு ஜனாதிபதி ரெஸப் தையிப் அர்துகான் தெரிவித்துள்ளார். நேற்று துருக்கியின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியாக பொறுப்பேற்றதான் பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஜனநாயகம், அடிப்படை உரிமைகள், சுதந்திரம், பொருளாதாரம், பாரிய அளவிலான முதலீடு என அனைத்துத் துறைகளும் விருத்தி செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை அரசியல், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பாதித்த ஒரு முறையிலிருந்து துருக்கி வெளியேறி வருவதாக அவர் குறிப்பிட்டார். அங்காரா நகரில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இந்த பதவியேற்பு நிகழ்வில் பல வெளிநாட்டுத் தலைவர்களும், ராஜதந்திரகளும் கலந்து கொண்டார்கள். இவர்களில் ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ், வெனிசுவெலா ஜனாதிபதி நிகலஸ் மதுரோ, கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி ஆகியோரும் அடங்குகின்றனர்.