Sri Lanka Brodcasting Corporation

Sat09222018

Last updateTue, 10 Jul 2018 1pm

உள்ளூர்

கொழும்பு நகரில் வெள்ளநீரை கட்டுப்படுத்துவதற்காக இரண்டு சுரங்கப் பாதைகள் அமைக்கப்படவுள்ளன

கொழும்பு நகரில் வெள்ள நீர் கட்டுப்பாட்டிற்காக இரண்டு சுரங்கப் பாதைகள் அமைக்கப்படவிருக்கின்றன. பெருநகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு, சைனா பெற்றோலியம் பைப்லைன்ஸ் தனியார் நிறுவனத்துடன் இது தொடர்பான ஒப்பந்தத்தில் இன்று கைச்சாத்திட்டது. முதலாவது சுரங்கப்பாதை கொழும்பு புதிய முத்துவெல்ல பிரதேசத்தில் அமைக்கப்படவிருக்கிறது. இது 170 மீற்றர் நீளமானதாகும்

Read more...

இனவாதத்தை பரப்பி, இராணுவ வீரர்களை காட்டிக் கொடுத்து ஆட்சிக்கு வர சிலர் முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


இனவாதத்தை பரப்பி, இராணுவ வீரர்களை காட்டிக் கொடுத்து அதிகாரத்திற்கு வர சிலர் முயன்று வருகிறார்கள் என்று அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக எந்தவொரு போலிப் பிரசார நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டாலும், அரசாங்கம் தொடர்ந்தும் முன்னோக்கிச் செல்லும் என்று அவர் கூறினார். கண்டியில் அரச ஊழியர்களுக்காக நிர்மாணிக்கப்படவிருக்கும் வீடமைப்புத் திட்டத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அவர் உரையாற்றினார்.

உயர்தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை விடுமுறை காலத்திற்குள் மேற்கொள்வதற்கான யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.

கல்விக் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரம், உயர்தரம் ஆகிய பரீட்சைகளில் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை விடுமுறை காலத்திற்குள் பூர்த்தி செய்வது பற்றி யோசனை முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பெறுபேறுகளை வெளியிடுவதில் ஏற்படும் அநாவசிய தாமதங்களை தடுப்பது இதன் நோக்கமாகும். விடைத்தாள் மதிப்பீட்டுக்காக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் மூடப்படும் காலப்பகுதியை குறைப்பதே இதன் நோக்கமாகும் என்றும் அவர் கூறினார்.

நெல்லை தொடர்ந்தும் கொள்வனவு செய்ய நெல் சந்தைப்படுத்தும் சபை நடவடிக்கை.

நெல் சந்தைப்படுத்தல் சபை விவசாயிகளிடமிருந்து தொடர்ந்தும் கொள்வனவு செய்யும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதற்கு தேவையான களஞ்சிய வசதிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் களஞ்சிய வசதிகள் இல்லாத சந்தர்ப்பங்களில் தனியார் களஞ்சியசாலைகளும் பயன்படுத்தப்படவிருக்கின்றன.

2018ஆம், 2019ஆம் ஆண்டு காலப் பகுதியில் எட்டாயிரத்து 900 வீடுகளை பொதுமக்களுக்காக கையளிக்க நடவடிக்கை

2018ஆம் 2019ஆம் ஆண்டுகளில் எண்ணாயிரத்து 903 வீடுகளை மக்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளதாக பெருநகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.

Read more...

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் தாதியர் பற்றாக்குறைக்கு தீர்வுகாண நடவடிக்கை

வடக்கு, கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் நிலவும் தாதியர் பற்றாக்குறைக்கு தீர்வுகாணும் நோக்கில் உயர்தரப் பரீட்சையில் எந்தவொரு பிரிவிலும் சித்தியடைந்தவர்களை இரண்டு மாகாணங்களிலிருந்து இணைத்துக் கொள்ள அமைச்சர் ராஜி;த்த சேனாரட்ன தீர்மானித்துள்ளார்.

Read more...

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. வீடுகளையும், கிணறுகளையும் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

Read more...

இன்று இந்துக்களுக்கு வைகாசி விசாக நோன்மதி – பௌத்தர்களுக்கு பொசொன் பௌர்ணமி

இன்று இந்துக்களுக்கும் பௌத்தவர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த தினமாகும்.

இந்துக்கள் இன்று வைகாசி விசாக பூரணையாகக் கொண்டாடுகின்றார்கள். இன்றைய தினம் தீமைகளை அழிப்பதற்காக முருகப்பெருமான் சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து அக்னி ரூபமாக அவதரித்த தினமாகக் கருதப்படுகிறது. இன்றைய தினம் முருகன் ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெறும்.

Read more...

காலநிலை சீர்கேட்டால் பாதிக்கப்பட்ட பெருந்தோட்ட மக்களுக்கு புதிய வீடுகள் - அமைச்சர் பழனி திகாம்பரம்

சீரற்ற காலநிலையின் விளைவுகளால் நிர்க்கதியான பெருந்தோட்ட மக்களுக்கு கூடிய விரைவில் வீடுகளை அமைத்துக் கொடுக்கப் போவதாக மலைநாட்டு, புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

Read more...

நாமல்-உயன பூங்காவை மத்திய கலாசார நிதியத்தின் கீழ் கொண்டுவர நடவடிக்கை

தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் பிரசித்தி பெற்றுள்ள நாமல்-உயன பூங்காவை மத்திய கலாசார நிதியத்தின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பூங்காவில் உள்ள இளஞ்சிவப்பு நிற பளிங்குப் படிகங்கள் சகலரையும் கவர்ந்திழுப்பவை. இதனை எதிர்கால சந்ததிக்காக பேணிப்பாதுகாப்பதற்கும், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த தலமாக அபிவிருத்தி செய்வதற்குமாக மத்திய கலாசார நிலையத்தின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுத்தாக பூங்காவின் ஸ்தாபகர் சங்கைக்குரிய வனவாசி ராகுல தேரர் தெரிவித்தார்.

Read more...

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி