Sri Lanka Brodcasting Corporation

Sun04212019

Last updateTue, 20 Nov 2018 3pm

உள்ளூர்

மேல் மாகாணத்தில் மேலும் 494 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

மேல் மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக மேலும் 494 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

இது தொடர்பான வைபவம் இன்று முற்பகல் கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் நடைபெறும். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொள்வார்.

2014ஆம், 2016ஆம், 2017ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற போட்டிப் பரீட்சைகளில் ஆகக் கூடுதலான புள்ளிகளை பெற்ற பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படுகின்றன. அதன் ஒரு கட்டமாக இன்று நியமனக் கடிதங்கள் கையளிக்கப்படுகின்றன.

2015ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை மேல் மாகாணத்தில் இரண்டாயிரத்து 822 ஆசிரியர்கள் நியமனம் பெற்றுள்ளார்கள்.

காணாமல் போனவர்கள் தொடர்பான பட்டியல் உள்ளதாக வெளியான ஊடக செய்திகளுக்கு காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் மறுப்பு

காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் தவிசாளரை மேற்கோள் காட்டி சமீபத்தில் வெளியான சில செய்திகள் குறித்து அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது.

இறுதிக் கட்ட யுத்தத்தில் காணாமல் போனவர்கள் மற்றும் ஆயுதப் படைகளிடம் சரணடைந்தவர்களின் விபரங்கள் அடங்கிய பெயர் பட்டியலை தாம் வெளியிடத் தயாரென தவிசாளர் சாலிய பீரிஸ் கூறியிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

Read more...

மாகாண சபை தேர்தல் முறையை கண்காணிக்க நியமித்த குழு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருடன் பேச்சுவார்த்தை

மாகாண சபை தேர்தல் முறையை பரிசீலிப்பதாக சிவில் அமைப்புக்கள் பிரேரித்த குழுவின் பிரதிநிதிகள் நேற்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை நேற்று சந்தித்தது.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில் மாகாண சபை தேர்தலை நடத்துவதில் உள்ள சிக்கல்கள் பற்றி ஆராய்ந்ததாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

Read more...

எப்பாவல பொஸ்பேட் உற்பத்தி நடவடிக்கைகளை துரிதமாக மீள ஆரம்பிப்பது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது

முன்னைய அரசாங்கம் 90 கோடி ரூபாவை வழங்கியிருந்தால், எப்பாவல பொஸ்பேட் கனிமத்திலிருந்து உலகின் மிகச் சிறந்த பொஸ்பேட் உரத்தை தயாரித்திருக்கலாம் என கல்விமான் குழுவொன்று அறிவித்துள்ளது.

Read more...

நாடக விற்பனைக்கான 14 சதவீத வரியை அறவிடுவது தொடர்பாக காணப்படும் முறைமையை திருத்தியமைத்து இந்த வரியை அறவிட வேண்டாமென்று ஜனாதிபதி பணிப்புரை

புதிய வரிக் கொள்கையில் இடம்பெற்றுள்ள விடயங்களுக்கு தவறாக விளக்கம் அளித்துள்ளமையினால் நாடக விற்பனைக்கான 14 சதவீத வரியை அறவிடுவது தொடர்பாக காணப்படும் முறைமையை திருத்தியமைத்து இந்த வரியை அறவிட வேண்டாமென்று உரிய நிறுவனங்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதி அமைச்சுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். புதிய நிதிக் கொள்கையினால் உள்நாட்டு சினிமா துறை, நாடகத்துறை என்பனவற்றின் முன்னேற்றத்திற்கு பாதிப்பு ஏற்பட்டடிருக்குமாயின் உரிய நிறுவனங்களுடன் கலந்துரையாடி நியாயமான தீர்வை வழங்குமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதான இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்படுவதை தவிர மாற்று வழிகள் இல்லையென்று அமைச்சர் ராஜித சேனாரத்ன சுட்;டிக்காட்டியுள்ளார்.

பிரதான இரண்டு கட்சிகளும் இணைந்து  முன்னோக்கிச் செல்லும் வேலைத் திட்டத்தை தவிர மாற்று வழிகள் இல்லையென்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகளின் தேவைக்காவே அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டதாகும் என்றும் அவர் கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் கருத்து வெளியிட்டார்.

என்டர்பிரைஸஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் தொழில்வாய்ப்புக்கள் உருவாக்கப்படவிருக்கின்றன

அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என்டர்பிரைஸஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் தொழில்வாய்ப்புக்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு மாவட்;ட மட்டங்களில் கண்காட்சிகளை நடத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு எம்.ஆர்.ஐ இயந்திரத்தையும், கண்டி போதனா வைத்தியசாலைக்கு பெட் ஸ்கேனர் இயந்திரத்தையும் துரிதமாக வழங்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருப்பதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

Read more...

ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களின் விவசாய செயற்றிட்டங்களுக்கு உலக வங்கியின் நிதியுதவி

ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களின் விவசாய செயற்றிட்டங்களுக்கு உலக வங்கியின் நிதியுதவி வழங்குகிறது. உலக வங்கியின் நிலைபேறான அபிவிருத்தி தொடர்பான செயற்றிட்ட முகாமையாளருக்கும், அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த இணக்கப்பாடு எடுக்கப்பட்டது. இதற்குத் தேவையான நிதியுதவியை வழங்கவும் அவர் இணக்கம் தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களின் பகிடிவதையை கட்டுப்படுத்துவதற்காக புதிய கைத்தொலைபேசி எப் அறிமுகம்.

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதையை கட்டுப்படுத்துவதற்காக கைத்தொலைபேசி எப் வகையை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிமுகம் செய்துள்ளது.

பகிடிவதையை கட்டுபடுத்தும் பொறுப்பு உபவேந்தர்கள், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் ஆகியோரை சாரும் என்று அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய தொலைபேசி எப்பை அறிமுகம் செய்யும் நிகழ்வில் அவர் உரையாற்றினார்.

Read more...

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தவிசாளராக அமைச்சர் மங்கள சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தவிசாளராக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி