Sri Lanka Brodcasting Corporation

Thu09202018

Last updateTue, 10 Jul 2018 1pm

உள்ளூர்

பொதுமக்களின் சொத்துக்களின் வீண்விரயத்திற்கு எதிராக பாரிய மக்கள் கருத்தைத் திரட்ட வேண்டுமென்று மக்கள் விடுதலை முன்னணி தெரிவிப்பு.

பாராளுமன்ற பொதுக்குழு சமர்ப்பித்த அறிக்கையின் மூலம் தனிப்பட்ட வகையில் சொத்துக்களை திரட்டுவதற்காக அரசாங்கம் நிறுவனங்களைப் பயன்படுத்திய முறையை தெளிவாகக் காணக்கூடியதாக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. இன்று காலை கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திசாநாயக்கபொதுமக்களுக்கு சேவையை மேற்கொள்வதற்குப் பதிலாக செல்வத்தைத் திரட்டும் வழிமுறையாக அரச நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். அரச நிறுவனங்கள் பொதுமக்களின் பணத்திலேயே நடத்தப்படுகின்றன. இதற்கு ஏற்பட்டுள்ள நிலைமை இந்த அறிக்கையின் மூலம் தெளிவாகியுள்ளது. அரசாங்கம் உடனடியாக செயற்பட்டு இந்த நிறுவனங்களை சரியான வழியில் இட்டுச் செல்ல வேண்டும். ஊழல் மற்றும்மோசடிகளை மேற்கொண்டவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார். பொதுமக்களின் சொத்துக்களின் வீண்விரயத்திற்கு எதிராக மக்கள் கருத்தைத் திரட்ட வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

தகவல் தொழில்நுட்பம், டிஜிற்றல் உட்;கட்டமைப்புத் தொடர்பான ஒப்பந்தத்தில் இலங்கையும் சீனாவும் கைச்சாத்திட்டுள்ளன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தூதுக்குழுவினர் சீனாவில் ஹூவாவி நிறுவனத்தைப் பார்வையிட்டுள்ளார்கள். எதிர்காலத்திற்குப் பொருத்தமான வகையில் நகர நிர்மாணத்தை மேற்கொள்ளும்போது தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் பற்றி விஜயத்தின்போது கவனம் செலுத்தப்பட்டது. தகவல் தொழில்நுட்பத் துறை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகள் பற்றி ஹூவாவி நிறுவனத்தின் உப தலைவர் இலங்கை தூதுக்குழுவினருக்கு விளக்கமளித்தார். இலங்கையில் நு-  புழஎநசnஅநவெ வேலைத்திட்டத்தை அமுற்படுத்தும் போது கிடைக்கும் நன்மைகள் பற்றியும் ஹூவாவி நிறுவனத்தின் அதிகாரிகள் பிரதமர் தலைமையிலான தூதுக்குழுவினருக்கு விளக்கிக்கூறினார். தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிற்றல் உட்கட்டமைப்பு தொடர்பான ஒப்பந்தமும் இதன் போது கைச்சாத்திடப்பட்டது. 

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது. பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார். மூன்று இலட்சத்து 15 ஆயிரத்து 605 பரீட்சார்த்திகள் இரண்டாயிரத்து 204 பரீட்சை மத்திய நிலையங்களில் இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இத்தொகையில் இரண்டு இலட்சத்து, 40 ஆயிரத்து 999 பேர் பாடசாலை

Read more...

நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதற்கு தீய சக்திகளுக்கு இடமளிக்கக்கூடாதென்று அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாட்டைச் சீர் குலைப்பதற்கு  தீய சக்திகளுக்கு இடமளிக்கக் கூடாதென்று அமைச்சர் பாட்டெலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். எமது நிலையத்தில் இடம்பெற்ற சுபாரதி நிகழ்ச்சியில் இன்று காலை அமைச்சர் கலந்து கொண்டார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் தற்பொழுது இடம்பெறும் பாதயாத்திரை போன்ற விடயங்கள் தொடர்பில் விளக்கம் அளித்தார். வழக்குகளில் இருந்து விடுதலை பெறுவதற்கான இவ்வாறான நடவடிக்கைகளி இந்த சக்திகள் ஈடுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Read more...

வற் வரி காரணமாக பொதுமக்கள் எதிர்கொண்டுள்ள சிரமத்தை எதிர்வரும் வாரத்தில் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளுமென்று ஜனாதிபதி தெரிவிப்பு.

வற் வரி காரணமாக பொதுமக்கள் எதிர்கொண்டுள்ள சிரமத்தை நீக்குவதற்கு  எதிர்வரும் வாரத்தில் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதற்காக 3 பிரிவுகளில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எதிர்வரும் 2 தினங்களில் பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வற் வரியில் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வற் வரிக்கு உட்படாத பொருட்களுக்காக அந்த வரிக்கு உட்படுத்தியுள்ள வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வற் வரியை கூடுதலாக அறவிடும் நபர்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார். சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு கொழும்பில் இன்று நடைபெற்ற வைபவத்தில் ஜனாதிபதி உரையாற்றினார்.

Read more...

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியை எதிர்வரும் திங்கட்கிழமை நியமிக்க ஜனாதிபதி தீர்மானம்.

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியை  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்கத் தீர்மானித்துள்ளார். இந்த நியமனம் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

Read more...

விரைவில் மத்திய வங்கியின் புதிய ஆளுனர் - ஜனாதிபதி அறிவிப்பு

மத்திய வங்கி ஆளுனரின் பதவிக்காலம் முடிவடைவதால் புதிய ஆளுனர் நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புதிய தீர்வைகளால் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில் விரைவில் தீர்வைகளில் மாற்றங்களை மேற்கொள்ளப்போவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். கிராந்துருக்கோட்டை மகளிர் விளையாட்டரங்கில் இடம்பெற்ற பதுளை மாவட்ட சிறுநீரக நோய்த்தடுப்பு தேசிய வேலைத்திட்ட நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.

Read more...

புதிய அரசியல் யாப்பு பற்றி சமூகத்தில் தவறான கருத்துக்களைப் பரப்பும் சதிமுயற்சி பற்றிய தகவல் அம்பலமாகியுள்ளது.

திட்டமிட்டு செயற்படும் குழுவொன்று புதிய அரசியல் யாப்பு குறித்து போலி பிரசாரங்களையும், எதிர்மறை கருத்துக்களையும் பரப்ப தொடங்கியிருப்பதாக பிரதமரின் அலுவலகம் அறிவித்துள்ளது.

அரசியல் யாப்பு பிரேரணையோ, அது தொடர்பான வேறெந்த ஆவணமோ தயாரிக்கப்படவில்லை. இத்தகைய பின்னணியில், புதிய அரசியல் யாப்பின் சரத்துக்கள் பற்றி எதிர்வுகூறும் கருத்துக்கள் வெளியாவதாக பிரதமர் அலுவலகம் விடுத்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சமகால அரசியல் யாப்பில் உள்ள பௌத்தம் தொடர்பான சரத்துக்கள் மாற்றப்படுமென கருத்துக்கள் வெளியாகின்றன. இவை முற்றிலும் உண்மைக்கு முரணானவை. தேரவாத பௌத்தத்தை பேணி பாதுகாத்து போஷித்;து வளர்க்கும் கடமையை அரசாங்கம் சரிவர நிறைவேற்றும்.

Read more...

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி