Sri Lanka Brodcasting Corporation

Sat02162019

Last updateTue, 20 Nov 2018 3pm

உள்ளூர்

மாகாணசபைத் தேர்தலை துரிதமாக நடத்துவதற்கான பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.


எதிர்வரும் மாகாணசபை தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று இடம்பெற்றது. சபாநாயகர் கரு ஜயசூரிய, மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர், எல்லை நிர்ணய ஆணைக்குழவின் தலைவர், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோர் கலந்துரையாடலில்; பங்கேற்றார்கள். தேர்தலுடன் தொடர்புடைய முக்கிய விடயங்கள் பற்றி இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. மாகாணசபைத் தேர்தலை பழைய மற்றும் புதிய முறைகளின் கீழ் நடத்துவது பற்றியும், எல்லை நிர்ணயம் தொடர்பாகவும், இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக அடுத்த மாதம் 5 ஆம் திகதி பாராளுமன்ற ஒத்திவைப்பு வேளை மீதான விவாதத்தை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டதாக சபாநாயகர் கூறினார்.

பாடசாலை அதிபர் ஒருவருக்கு அநீதியான முறையில் இடமாற்றம் வழங்கிய வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் குற்றவாளியென உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


2008ஆம் ஆண்டில் 11 பேர் காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான லெப்டினன் கொமாண்டர் பிரசாத் ஹெட்டியாராச்;சியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் விளக்குமறியலில் வைக்கப்பட்டுள்ள கடற்படையின் முன்னாள் புலனாய்வு சிப்பாய்களுக்கான விளக்க மறியல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க, அவரது மனைவி உட்பட மூன்று பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் ஒருவருக்கு அநீதியான முறையில் இடமாற்றம் வழங்கிய வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரட்;ன உரிய அதிபருக்கு இரண்டரை இலட்சம் ரூபா அபராதம் செலுத்த வேண்டுமென்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடுமையான ஆட்சி நாட்டு அவசியம் என்ற கூற்றின் மூலம் கடந்த கால ஆட்சியாளர்களின் சுயரூபம் தெளிவாகிறதென அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

மனித உரிமைகளை உறுதிப்படுத்தி கடனை செலுத்திய வண்ணம் நாட்டை முன்னெடுத்துச் செல்லும் அரசாங்கத்திற்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர்நாயகம் சுதர்சன குணவர்த்தன தெரிவித்துள்ளார். கடுமையான ஆட்சி, நாட்டுக்கு அவசியம் என்ற கருத்தின் மூலம் கடந்த  ஆட்சியின் சுயரூபம் தெளிவாகிறதெனவும் அவர் கூறினார். இந்தக் காலப்பகுதியில் மனித உரிமைகள் மாத்திரமின்றி நிதி நிர்வாக கட்டமைப்புககளும் சீர்குலைந்ததாக சுதர்;சன குணவர்த்தன தெரிவித்தார்.

புதிய உள்நாட்டு வருமான சட்டத்தின் கீழ் வரி ஆலோசனை அறிக்கைகளை பெறலாம் என உள்நாட்டு வருமான வரி ஆணையாளர் நாயகம் அறிவிப்பு.

புதிய முதலீட்டையோ, தொழில் முயற்சியையோ தொடங்குகையில் உள்நாட்டு அரசிறை திணைக்களத்திற்கு 25 ஆயிரம் ரூபா செலுத்துவதன் மூலம் தீர்வைகள் பற்றிய ஆலோசனைகளை பெற முடியும் என உள்நாட்டு அரசிறை ஆணையாளர் நாயகம் ஐவன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறை உலகம் முழுவதிலும் அமுலில் உள்ளது. இதற்கு முன்னர் இலங்கையில் தீர்வை ஆலோசனைகளை பெறுவதற்கு வெளித் தரப்பிற்கு இரண்டு லட்சம் ரூபாவிற்கு மேலான தொகையை செலுத்த வேண்டியிருந்தது. இந்தப் பிரச்சினைக்கு பரிகாரம் காணும் நோக்கில் புதிய உள்நாட்டு அரசிறை சட்டத்தின் கீழ் மாற்றங்களை மேற்கொண்டதாக திரு திஸாநாயக்க தெரிவித்தார்.

இந்த நடைமுறை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன சமீபத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை அவர் நிராகரித்தார்.

சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை மீதான பாராளுமன்ற விவாதத்திற்கு சபை முதல்வர் அனுமதி.

சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை பற்றி ஆராய அடுத்த பாராளுமன்ற அமர்வில் விவாதமொன்றை பெற்றுத்தர சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல இணக்கம் தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் அங்கத்தவர் தினேஷ் குணவர்தன விடுத்த கோரிக்கையை ஏற்று, விவாதத்தை நடத்த சபை முதல்வர் இணங்கியிருக்கிறார்.

இதன் பிரகாரம், குறித்த விவாதத்தை எதிர்வரும் 18ஆம் திகதியோ, அதற்கு முன்னதாகவோ நடத்துவது பற்றி கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கம் காணப்படும்.

நாட்டின் ஜனநாயக வரம்புகளுக்குள் தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கூறுகிறார்.

குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கும் நடைமுறையை நாட்டின் சட்டவரம்பிற்கும், ஜனநாயக வரம்புகளுக்கும் உட்பட்டவாறு அரசாங்கம் முன்னெடுப்பதாக நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

திருடர்களை பிடித்தல் என்பது, எவர் மீதாவது சந்தேகம் ஏற்பட்டால், துப்பாக்கியை கொண்டு சென்று அவரை சுட்டுக் கொல்வதல்ல. அதைத்தான் முன்னைய ஆட்சியாளர்கள் செய்தார்கள் என கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன குறிப்பிட்டார்.

சட்டவரம்புகளுக்கு உட்பட்டவாறு சந்தேகநபர்களுக்கு முறையாக வாய்ப்பளித்து, யார் குற்றவாளி என்பதை தீர்மானிப்பது அவசியம். தற்போது உரிய நடைமுறைகள் அனுசரிக்கப்படுகின்றன. பலர் நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். இந்த நடைமுறைகள் சரியாக பூர்த்தியடைய கால அவகாசம் தேவை என அவர் மேலும் கூறினார்.

பொசொன் போயா தினத்தை முன்னிட்டு மத அனுஷ்டானங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

பொசொன் போயா தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் அமைந்துள்ள வெஹர விஹாரைகளில் நாளை பல்வேறு மத அனுஷ்டானங்கள் இடம்பெறவிருக்கின்றன.

பொசொன் போயா தினத்தன்று பத்து லட்சம் அடியார்கள் அனுராதபுரம் புனிதப் பிரதேசத்திற்கு செல்வார்கள் என அனுராதபுர மாவட்ட செயலாளர் ஆர்.எம்.வன்னிநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அடியார்களுக்குத் தேவையான சகல வசதிகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. 200க்கும் அதிகமான தான நிகழ்வுகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

இதேவேளை, இரண்டாயிரத்திற்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். இன்று காலை மூன்று ரயில்கள் கொழும்பிலிருந்து அனுராதபுரத்திற்கான பயணத்தை மேற்கொண்டுள்ளன. நாளைய தினத்திலும் ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

பிரகீத் எக்னெலிகொட எல்ரிரிஈ அமைப்பினருடன் தொடர்பு வைத்திருந்தாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை அவரது மனைவி நிராகரித்துள்ளார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட எல்ரிரிஈ அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை தாம் நிராகரிப்பதாக அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு சமூக ஊடகங்களின் மூலம் தமக்கு எதிராக சேறு பூசும் முயற்சிகள் இடம்பெற்றதாகவும், அதுபற்றி தாம் கவலை அடைவதாகவும் அவர் கூறினார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவரது மனைவி கருத்து வெளியிட்டார்.

நுவரெலியாவில் சிறுத்தையொன்று உலாவுவதாக பிரதேசவாசிகள் அச்சம் வெளியிட்டுள்ளார்கள்.

நுவரெலியா கல்வேஸ்-லேன்ட் பிரதேசத்தில் சிறுத்தையொன்று நடமாடுவதாக பிரதேசவாசிகள் கவலை வெளியிட்டுள்ளார்கள். இந்த சிறுத்தையின் தாக்குதலுக்கு உள்ளான போனியொன்றின் உடற்பாகங்களும் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த சிறுத்தையை பிடிப்பதற்கு வனஜீவராசிகள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

'என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா' வேலைத்திட்டத்திற்காக இந்த வருடத்தில் 50 பில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட தொகை ஒதுக்கீடு

'என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா' என்ற வேலைத்திட்டத்திற்காக 50 பில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட தொகையை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இதன் கீழ் பெற்றுக் கொள்ளப்படும் கடனுக்கு அறவிடப்படும் வட்டியில் பெருந்தொகையை அரசாங்கம் செலுத்தும். புதிய தொழில்

Read more...

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி