உள்ளூர்

நாட்டில் சட்டவாட்சி சீர்குலைந்திருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் முன்வைத்துள்ள கருத்துக்கு சட்டத்தரணிகள் எதிர்ப்பு

நாட்டின் சட்டவாட்சி சீர்குலைந்திருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் முன்வைத்த கருத்தை சட்டத்தரணிகள் முற்றுமுழுதாக நிராகரித்துள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்திலேயே சட்டவாட்சி சீர்குலைந்திருந்ததாக சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கடந்த ஆட்சி காலத்தில் வெலிக்கட சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நாட்டின் வரலாற்றில் சட்டவாட்சி சீர்குலைந்த ஒரு சந்தர்ப்பமாகும் என்று கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக்க பெரேரா தெரிவித்தார்.