Sri Lanka Brodcasting Corporation

Fri09212018

Last updateTue, 10 Jul 2018 1pm

உள்ளூர்

பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்போடு பாதுகாப்பை வலுப்படுத்துமாறு முஸ்லிம் மக்களிடம் கோரிக்கை

இன்றைய ஜூம்மா தொழுகையை முன்னிட்டு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. இந்த அறிவித்தலில் ஏழு விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

முஸ்லிம்களுக்கு மன ஆறுதல் அளிக்கும் வகையிலும், உணர்வுகளை தூண்டாத விதத்திலும் குத்பாப் பிரசங்கங்களை அமைத்துக் கொள்ளுமாறு உலமா சபையின் பத்வா குழு செயலாளர் அஷ்செய் இல்லியாஸ் மொஹமட் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்போடு பாதுகாப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் அவசரகால சட்டம் அமுலில் உள்ளதால் ஜூம்மா முடிந்தவுடன் சட்டத்தை மதித்து அமைதியாக கலைந்து செல்லுமாறும் முஸ்லிம்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி