Sri Lanka Brodcasting Corporation

Thu06212018

Last updateThu, 21 Jun 2018 6am

உள்ளூர்

கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளை இலங்கை கிரிக்கட் அணியின் சிரேஷ்ட வீரர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளார்கள்.

நாட்டில் பிளவுபட்டுள்ள சில தரப்புக்கள் கடந்த கால அனுபவங்களில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளவில்லை என்று இலங்கை ஒரு நாள் கிரிக்கட் அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார். கண்டிப் பிரதேசத்தில் நிலவிய வன்முறைகளை நிராகரிப்பதாகவும், இலங்கைத் தேசத்தவர்கள் இனவாதத்திற்கு எதிராக செயற்பட வேண்டுமென்றும் அஞ்சலோ மெத்தியூஸ் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை ஒருபோதும் இன, மத அடிப்படையில் கடந்த காலங்களில் மோதல்களை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்று இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். அன்பு, நம்பிக்கை, பொறுப்பேற்கும் தன்மை என்பன இலங்கையர்களுக்கு மத்தியில் காணப்படும் பொதுவான அம்சங்களாகும் என்று சங்கக்கார சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் நிலவும் அமைதியற்ற நிலைக்குக் காரணமான அனைவரையும் சட்டத்தின் முன்;;; நிறுத்துவது அவசியம் என்று இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார். தமது வாழ்நாளில் நீண்டகாலமாக யுத்த சூழலில் வாழ்ந்ததாகவும், எதிர்கால சந்ததியினர் இவ்வாறான நிலைக்கு முகம் கொடுக்க வேண்டியதில்லை என்றும் மஹேல ஜயவர்த்தன வலியுறுத்தியுள்ளார். நாட்டில் நிலவிய வன்முறைகள் பற்றி கவலையடைவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். இலங்கை நேசத்திற்குரிய நாடு என்றும், நேசிக்கக்கூடிய மக்கள் வாழும் நாடு எனவும், இங்கு நிலவும் நெருக்கடிகள் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் இந்திய கிரிக்கட் அணியின் சுழல்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி