Sri Lanka Brodcasting Corporation

Mon02262018

Last updateSat, 24 Feb 2018 10am

உள்ளூர்

தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி – 65 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர்

நாட்டின் சகல வாக்கெடுப்பு மத்திய நிலையங்களுக்கும் வாக்கு பெட்டி கொண்டு செல்லப்பட்டுள்ளன.

நாட்டின் சகல வாக்கெடுப்பு மத்திய நிலையங்களுக்கும் வாக்குப் பெட்டிகளையும் வாக்குச் சீட்டுகளையும் எடுத்துச் செல்லும் நடவடிக்கை பூர்த்தியடைந்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.சி ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

வாக்குப் பெட்டிகளும் வாக்குச் சீட்டுகளும் உரிய இடங்களுக்கு சென்றடைவதாகவும் அவர் கூறினார். வாக்கெடுப்பு நிலையங்களில் இடம்பெறும் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்திருப்பதாக அவர் கூறினார்.

இதேவேளை உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க மக்கள் பிரதிநிதிகள் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார்கள் என்று பப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

பிரதான இரண்டு கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை ஸ்தாபித்துள்ளமையினால் மோதல்களும் அரச வளங்கல்களை முறைகேடாக பயன்படுத்தும் போக்கும் குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளார்கள். தேர்தல் பாதுகாப்பு பணிகளில் 65 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். தேர்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக கடமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. பொலிஸ் நடமாடும் சேவையும் அமுலாகிறது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ரூவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி