Sri Lanka Brodcasting Corporation

Fri08172018

Last updateTue, 10 Jul 2018 1pm

உள்ளூர்

மொறஹாகந்த நீர்ப்பாசத்திட்டத்தின் மூலம் ஒன்றரை இலட்சம் குடும்பங்கள் நேரடியாக நன்மையடையவுள்ளன.

21 ஆம் நூற்றாண்டுக்கு விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு இந்நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாரிய நீர்த்தேக்கமாக மொறஹாகந்த நீர்த்தேக்கத்தை அடையாளப்படுத்த முடியும் என்று மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் திட்டப்பிரிவின் பணிப்பாளர் லங்கா பண்டார தெரிவித்துள்ளார். எமது நிலையத்தில் இடம்பெற்ற சுபாரதி நிகழ்ச்சியில் இன்று கலந்தபோதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இந்த நீர்த்தேக்க  திட்டத்தின் மூலம் பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு நன்மை கிடைக்கவுள்ளது. சுத்தமான குடிநீர், மின்சாரம், விவசாயத்துறைக்குத் தேவையான நீரை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் ஊடாக வெள்ளமும் கட்டுப்படுத்தப்படவுள்ளது என்றும் அவர் கூறினார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மொறகாஹந்த, களுகங்க அபிவிருத்தி திட்டத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் அதிகாரி பி.ஜி.தயானந்த கருத்து தெரிவிக்கையில் மொறகாஹந்த நீர்ப்பாசனத் திட்டத்தின் மூலம் ஒன்றரை இலட்சம் குடும்பங்கள் நேரடியாக நன்மை அடைகிறார்கள் என்று தெரிவித்தார்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி