Sat11172018

Last updateTue, 13 Nov 2018 1pm

Latest News

அவிசாவளை – அஸ்வத்தை இரும்பு பாலம் பிரதமர் தலைமையில் மக்கள் பாவனைக்கு


அவிசாவளை அஸ்வத்த இரும்பு பாலத்தை பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க இன்று திறந்து வைப்பார். இதன் திறப்பு விழா இன்று மாலை நான்கு மணிக்கு இடம்பெறும்.

இந்தப் பாலம் அஸ்வத்த 178 மீற்றர் நீளமானதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது ஏழு தசம் மூன்று-மீற்றர் அகலமானதாகும். இதில் இரண்டு ஒழுங்கைகள் உள்ளன.

அஸ்வத்த – ரன்வெல கிராமங்களை இணைக்கும் வகையில் பிரிட்டனின் மாபே பிரிஜ் நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியோடு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்திய சிறுமிகள் பொது இடங்களில் நடமாடுவதற்கு அச்சம் கொண்டுள்ளதாக ஆய்வொன்றில் கண்டுபிடிப்பு


தாம் பொது இடங்களில் நடமாடுகையில் இம்சைப்படுத்தலுக்கு உள்ளாவது பற்றி இந்திய சிறுமிகள் மத்தியில் அச்சம் நிலவுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வை மகளிர் உரிமைகளுக்காக போராடும் சேவ் தெ சிலரன் அமைப்பு நடத்தியுள்ளது. சிறகுகள் 2018 - இந்திய சிறுமிகளின் உலகம் என்ற பெயரில் ஆய்வு தொகுக்கப்பட்டுள்ளது.

நகரமாக இருந்தால் என்ன, கிராமமாக இருந்தால் என்ன, தாம் குறுகலான ஒழுங்கைகளில் நடந்து செல்வதற்கு பெரிதும் அச்சம் கொண்டுள்ளதாக 33 சதவீதமான சிறுமிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்பெயினின் பெண்ணிலைவாத பிரதமரது புதிய அமைச்சரவையில் ஆகக் கூடுதலான பெண்கள்

ஸ்பெயினில் சோஷலிசக் கொள்கைகளை அனுசரிக்கும் பிரதம மந்திரி பெட்ரோ சான்செஸ் அமைச்சரவையின் கூடுதலாக பெண்களுக்கு இடம் அளித்துள்ளார். அவரது புதிய அமைச்சரவையில் 17 பேர் அங்கம் வகிக்கிறார்கள். இவர்களில் 11 பேர் பெண்களாவர். பாதுகாப்பு, பொருளாதாரம், நிதி, கல்வி முதலான அமைச்சு பொறுப்புக்களும் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. முன்னாள் பிரதமர் மரியானோ ரஜோயின் அமைச்சரவையில் கூடுதலாக ஆண்களே ஆதிக்கம் செலுத்தினார்கள். புதிய பிரதமர் தம்மை பெண்ணிலைவாதியாக அடையாளப்படுத்துகிறார்.

மேல் மாகாணத்தில் மேலும் 494 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

மேல் மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக மேலும் 494 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

இது தொடர்பான வைபவம் இன்று முற்பகல் கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் நடைபெறும். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொள்வார்.

2014ஆம், 2016ஆம், 2017ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற போட்டிப் பரீட்சைகளில் ஆகக் கூடுதலான புள்ளிகளை பெற்ற பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படுகின்றன. அதன் ஒரு கட்டமாக இன்று நியமனக் கடிதங்கள் கையளிக்கப்படுகின்றன.

2015ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை மேல் மாகாணத்தில் இரண்டாயிரத்து 822 ஆசிரியர்கள் நியமனம் பெற்றுள்ளார்கள்.

காணாமல் போனவர்கள் தொடர்பான பட்டியல் உள்ளதாக வெளியான ஊடக செய்திகளுக்கு காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் மறுப்பு

காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் தவிசாளரை மேற்கோள் காட்டி சமீபத்தில் வெளியான சில செய்திகள் குறித்து அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது.

இறுதிக் கட்ட யுத்தத்தில் காணாமல் போனவர்கள் மற்றும் ஆயுதப் படைகளிடம் சரணடைந்தவர்களின் விபரங்கள் அடங்கிய பெயர் பட்டியலை தாம் வெளியிடத் தயாரென தவிசாளர் சாலிய பீரிஸ் கூறியிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

Read more...

மாகாண சபை தேர்தல் முறையை கண்காணிக்க நியமித்த குழு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருடன் பேச்சுவார்த்தை

மாகாண சபை தேர்தல் முறையை பரிசீலிப்பதாக சிவில் அமைப்புக்கள் பிரேரித்த குழுவின் பிரதிநிதிகள் நேற்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை நேற்று சந்தித்தது.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில் மாகாண சபை தேர்தலை நடத்துவதில் உள்ள சிக்கல்கள் பற்றி ஆராய்ந்ததாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

Read more...

எப்பாவல பொஸ்பேட் உற்பத்தி நடவடிக்கைகளை துரிதமாக மீள ஆரம்பிப்பது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது

முன்னைய அரசாங்கம் 90 கோடி ரூபாவை வழங்கியிருந்தால், எப்பாவல பொஸ்பேட் கனிமத்திலிருந்து உலகின் மிகச் சிறந்த பொஸ்பேட் உரத்தை தயாரித்திருக்கலாம் என கல்விமான் குழுவொன்று அறிவித்துள்ளது.

Read more...

நாடக விற்பனைக்கான 14 சதவீத வரியை அறவிடுவது தொடர்பாக காணப்படும் முறைமையை திருத்தியமைத்து இந்த வரியை அறவிட வேண்டாமென்று ஜனாதிபதி பணிப்புரை

புதிய வரிக் கொள்கையில் இடம்பெற்றுள்ள விடயங்களுக்கு தவறாக விளக்கம் அளித்துள்ளமையினால் நாடக விற்பனைக்கான 14 சதவீத வரியை அறவிடுவது தொடர்பாக காணப்படும் முறைமையை திருத்தியமைத்து இந்த வரியை அறவிட வேண்டாமென்று உரிய நிறுவனங்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதி அமைச்சுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். புதிய நிதிக் கொள்கையினால் உள்நாட்டு சினிமா துறை, நாடகத்துறை என்பனவற்றின் முன்னேற்றத்திற்கு பாதிப்பு ஏற்பட்டடிருக்குமாயின் உரிய நிறுவனங்களுடன் கலந்துரையாடி நியாயமான தீர்வை வழங்குமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதான இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்படுவதை தவிர மாற்று வழிகள் இல்லையென்று அமைச்சர் ராஜித சேனாரத்ன சுட்;டிக்காட்டியுள்ளார்.

பிரதான இரண்டு கட்சிகளும் இணைந்து  முன்னோக்கிச் செல்லும் வேலைத் திட்டத்தை தவிர மாற்று வழிகள் இல்லையென்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகளின் தேவைக்காவே அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டதாகும் என்றும் அவர் கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் கருத்து வெளியிட்டார்.

என்டர்பிரைஸஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் தொழில்வாய்ப்புக்கள் உருவாக்கப்படவிருக்கின்றன

அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என்டர்பிரைஸஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் தொழில்வாய்ப்புக்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு மாவட்;ட மட்டங்களில் கண்காட்சிகளை நடத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு எம்.ஆர்.ஐ இயந்திரத்தையும், கண்டி போதனா வைத்தியசாலைக்கு பெட் ஸ்கேனர் இயந்திரத்தையும் துரிதமாக வழங்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருப்பதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

Read more...

ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களின் விவசாய செயற்றிட்டங்களுக்கு உலக வங்கியின் நிதியுதவி

ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களின் விவசாய செயற்றிட்டங்களுக்கு உலக வங்கியின் நிதியுதவி வழங்குகிறது. உலக வங்கியின் நிலைபேறான அபிவிருத்தி தொடர்பான செயற்றிட்ட முகாமையாளருக்கும், அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த இணக்கப்பாடு எடுக்கப்பட்டது. இதற்குத் தேவையான நிதியுதவியை வழங்கவும் அவர் இணக்கம் தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களின் பகிடிவதையை கட்டுப்படுத்துவதற்காக புதிய கைத்தொலைபேசி எப் அறிமுகம்.

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதையை கட்டுப்படுத்துவதற்காக கைத்தொலைபேசி எப் வகையை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிமுகம் செய்துள்ளது.

பகிடிவதையை கட்டுபடுத்தும் பொறுப்பு உபவேந்தர்கள், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் ஆகியோரை சாரும் என்று அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய தொலைபேசி எப்பை அறிமுகம் செய்யும் நிகழ்வில் அவர் உரையாற்றினார்.

Read more...

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தவிசாளராக அமைச்சர் மங்கள சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தவிசாளராக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது.

தொழில் வாய்ப்பு தொடர்பான புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.


இலங்கையின் தனி தொழிவாய்ப்பு சட்டத்தை அறிமுகப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.

அமுலில் உள்ள சட்டத்தை இணைத்து இது அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் கூறினார். ஜெனீவாவில் இடம்பெற்ற உலக தொழிலாளர் அமைப்பின் 107ஆவது கூட்டத்தொடரில் அவர் உரையாற்றினார்.

ஜனாதிபதி பணிக்குழுவின் முன்னாள் பணிப்பாளருக்கு எதிர்வரும் 19ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல்.

இரண்டு கோடி ரூபா லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் ஜனாதிபதி பணிக்குழுவின் முன்னாள் தலைவர் கே.மஹாநாம, அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி.திஸாநாயக்க ஆகியோர் எதிர்வரும் 19ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க்பபட்டுள்ளார்கள். கொழும்பு பிரதம நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு வழங்கப்பட்டது.

உலக சுகாதார தினத்திற்கு அமைவாக யாழ் நகரில் பல்வேறு வேலைத்திட்டங்கள்.


உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வட மாகாணத்தில் யாழ் நகரை மையமாகக் கொண்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் அமுலாகின்றன.

இதற்கமைவாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மரநடுகை வேலைத்திட்டம் யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகில் இன்று இடம்பெற்றது. பல்வேறு வகையான ஆறாயிரம் மரக்கன்றுகள் இதன் போது நாட்டி வைக்கப்பட்டன.

இராணுவம், பொலிஸார், யாழ் மாநகரசபை என்பனவற்றின் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டார்கள். யாழ்ப்பாணத்தில் 16 பாடசாலைகளு இந்த வேலைத்திட்டத்தில் இணைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் இன்று தெரிவு செய்யப்படவுள்ளார்

பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு இன்று பிற்பகல் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

பிரதி சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Read more...

இலங்கையின் மொத்த வெளிநாட்டு ஒதுக்கம் இந்த ஆண்டில் தொள்ளாயிரத்து 50 கோடி அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது

நாட்டின் வெளிநாட்டு நாணய ஒதுக்கம் இந்த வருட இறுதியில் தொள்ளாயிரத்து 50 கோடி அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கும் என்று இலங்கை மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. நாட்டின் வெளிநாட்டு ஒதுக்கம் தற்சமயம் 770 கோடி அமெரிக்க டொலர்களாகும்.

இதேவேளை, இலங்கை பொருளாதாரத் துறையில் அடைந்துள்ள முன்னேற்றங்களில் சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளது.

தபால் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்று நள்ளிரவு முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது

தபால் மற்றும் தொலைத்தொடர்பாடல் சங்கம் முன்னெடுக்கும் இந்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று நள்ளிரவு முடிவடையும் என சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.கே.காரியவசம் தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்க நடவடிக்கை முடிவடைந்தவுடன் தபால் விநியோகப் பணிகள் துரிதப்படுத்தப்படவிருக்கின்றன. தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரிதமான முறையில் தீர்வு வழங்கப்படும் என தபால்துறை அமைச்சர் உறுதியளித்ததைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

விவசாய அபிவிருத்தி தேசிய சட்டமூலம் வெளியிடப்பட்டுள்ளது

விவசாய அபிவிருத்தி தொடர்பான தேசிய சட்டமூலம் வெளியிடப்பட்டுள்ளது. விவசாயத்துறையின் சுபீட்சத்திற்காக முழுமையான தேசிய கொள்கை தயாரிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஒத்துழைப்புடன் இது தயாரிக்கப்பட்டுள்ளது. சட்ட மூலம் அமைச்சர் மஹி;ந்த அமரவீரவிடம் நேற்று கையளிக்கப்பட்டது. இந்த தேசிய கொள்கை சட்டமூலம் அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.

Read more...

குவாத்தமாலா எரிமலையில் காணாமல் போனவர்களை தேடிக்கண்டுபிடிக்கும் முயற்சி

குவாத்தமாலாவில் நேற்று முன்தினம் நிகழ்ந்த பயங்கரமான எரிமலைக் குமுறலைத் தொடர்ந்து காணாமல் போனவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்தப் பணிகளில் தீயணைப்புப் படைவீரர்களுக்கு முப்படையினர் உதவி வருவதாக பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது. ஃபுவெகோ என்ற எரிமலையில் இருந்து வீசியெறியப்பட்ட எரிகற்களும், புகையும் தொலைதூரத்தில் இருந்த கிராமங்களிலும் அழிவை ஏற்படுத்தியுள்ளன.

Read more...