Thu09202018

Last updateTue, 10 Jul 2018 1pm

Latest News

வழக்குகள் தாமதம் அடைவதை தடுக்க நடவடிக்கை

வழக்குகள் தாமதம் அடைவடை தடுப்பது நீதிமன்ற திருத்தச் சட்டமூலத்தின் நோக்கமாகும் என்று சிவில் சமூக செயற்பாட்டாளர் சட்டத்தரணி ஜகத் லியனாராச்சி தெரிவித்துள்ளார். ஜனவரி 8ஆம் திகதி ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான உறுதி மொழிகளில் இதுவும் ஒன்றாகும். குற்றவியல் வழக்குகளை உயர் நீதிமன்றம் வரை எடுத்துச் சென்று தீர்ப்பை பெறுவதற்கு 20 ஆண்டுகள் வரை தாமதம் ஏற்படலாம். குற்றவியல் வழக்குகளை விசாரிப்பதற்கென மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

உடலில் பூசும் கிறீம் வகைகளை ஒழுங்குறுத்தும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது

உடம்பில் பூசப் பயன்படுத்தப்படும் கிறீம் வகைகளை ஒழுங்குறுத்துவதற்கான புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது. இதற்கமைய, உடம்பில் பூசப்படும் கிறீம் வகைகளில் அடங்கியுள்ள மூலப் பொருட்கள், பயன்படுத்தப்பட வேண்டிய அளவு என்பனவற்றை எழுத்துமூலம் பதிவு செய்திருப்பது அவசியமாகும். இது தொடர்பான வர்த்தமானியில் அதிகாரசபையின் தலைவர் ஒப்பமிட்டுள்ளார். இது தொடர்பான சட்டத்திற்கு அமைய செயற்படுவதற்கு உற்பத்தியாளர்களுக்கும், இறக்குமதியாளர்களுக்கும் ஆறு மாத அவகாசம் வழங்கப்படவுள்ளது.

அரசியல் கட்சிகளினதும், தொழிற்சங்க அமைப்புக்களின் மே தினக் கூட்டங்கள் நாட்டின் பல பகுதிகளில் இன்று நடைபெறுகின்றன.

மக்கள் விடுதலை முன்னணியின் மேதின கூட்டம் வழமை போன்று கொழும்பு பீஆர்சி விளையாட்டு மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது. பேரணி பிற்பகல் 1.00 மணியளவில் பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் இருந்து ஆரம்பமாகும்.

Read more...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மட்டக்களப்பில் நடைபெறுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம், கட்சியின்  தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மட்டக்களப்பு செங்கலடி மாவடிவேம்பு பிரதேசத்தில் இன்று பிற்பகல் நடைபெறும்;. 'தேசிய ஐக்கியத்திற்கு தொழிலாளர்களின் பலம்' என்பது இதன் தொனிப்பொருளாகும்.

திரைப்படக் கலைஞர் - லெஸ்;டர் ஜேம்ஸ் பீரிஸின் விருதை கொள்ளையிட்ட குழுவை பொலிசார் கைது செய்துள்ளனர்.

திரைப்படக் கலைஞர் கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிசின் இல்லத்தில் இருந்த தங்க மயில் விருது கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐந்து பேரைக் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பொலிசார் நடத்திய விசாரணைகளுக்கு அமைவாக சந்தேக நபர்களை கைது செய்ததாக இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ்

Read more...

ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை மே தினத்தை வழமையான சம்பிர்தாயங்களுக்கு அப்பால் நினைவு கூர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை மே தினத்தை சம்பிர்தாயங்களுக்கு அப்பால் நினைவு கூர்ந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும தெரிவித்துள்ளார். உழைக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற செயற்றிட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதாக ஐக்கிய தேசிய கட்சி இம்முறை மே தினத்தில் தெரிவித்துள்ளது என்றும் அவர் கூறினார். இன்று காலை எமது சேவையில் ஒலிபரப்பாக நிகழ்ச்சியில் கலந்து கொண்;டு அவர் தெரிவித்தார். இந்த நாட்டின் வருமானத்தில் நூற்றுக்கு 80 வீதம் 20 வீதமானோருக்கு இடையே பகிரப்படுவதாக அவர் தெரிவித்தார். இந்த இடைவெளியை நிரப்புவது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் உழைக்கும் மக்களின் நன்மைக்காக ஐக்கிய தேசிய கட்சி செயற்பட்டு வருவதாக பிரதமர் தெரிவிப்பு

 

நாட்டின் உழைக்கும் மக்களின் நன்மைக்காக கூடுதல் கரிசனையுடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்றியஒரேயொரு கட்சி ஐக்கிய தேசிய கட்சி என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உழைக்கும் மக்கள் வர்க்கம் மத்திய வருமான வர்க்கத்திற்குள் பிரவேசிப்பதற்கான கதவுகளை திறந்தபெருமை ஐக்கிய தேசிய கட்சியை சாரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இன்று கொழும்பு சுகதாஸ உள்ளக விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற மேதின கூட்டத்தில் கலந்து கொண்டுஉரையாற்றும் பொழுதே பிரதமர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

அவர்  மேலும் கருத்து வெளியிடுகையில்ஐக்கிய தேசிய கட்சி நாட்டின் கைத்தொழில் மற்றும்சேவைத்துறைகளை மேம்படுத்தியது என்றும் குறிப்பிட்டார்.

சட்டம் ஒழுங்கு முறையாக உறுதிப்படுத்தப்பட்டமையினால் மக்கள் எதுவித அச்சமும் இன்றி வாழக் கூடியசூழ்நிலை உருவாகியுள்ளது என்று தெரிவித்தார்ராஜபக்ஷ ஆட்சியில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்கள்தற்சமயம் கிரமமாக மீள செலுத்தப்படுகிறது என்று பிரதமர் தெரிவித்தார்எதிர்கால தேர்தல்களில் வெற்றிபெறும் நோக்கில் ஐக்கிய தேசிய கட்சி மறுசீரமைக்கபடும் என்றும் பிரதமர் தெரிவித்தார்கட்சியின் பிரதானபதவிகளுக்கு இளம் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கட்சி மீதான மக்களின் நம்பிக்கையை மீள கட்டியெழுப்பிய பின்னர் சாதாரண மக்களுக்கு அர்ப்பணிப்புடன்சேவையாற்றுவதே கட்சியின் நோக்கமாகும் என்று இங்கு உரையாற்றிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித்பிரேமதாஸ தெரிவித்தார்.

துன்பம் மற்றும் பல்வேறு அவலங்களிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றுதிரு.பிரேமதாஸ மேலும் தெரிவித்தார்விவசாயிகளுக்கு இலவசமாக உர வகைகளை வழங்குவதன்முக்கியத்துவம் குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் இங்கு வலியுறுத்தினார்கிராம எழுச்சித்திட்டத்தின் கீழ் இரண்டாயிரத்து 500 கிராமங்கள் ஸ்தாபிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை அரசாங்கம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்றுஇங்கு உரையாற்றிய அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

உழைக்கும் மக்களின் உரிமைகளை உச்ச அளவு பாதுகாப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தொழிலாளர் தின கொண்டாட்டங்கள் நாளையும், நாளை மறுதினமும் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெறவுள்ளன.

தொழிலாளர் தின கொண்டாட்ட நிகழ்வுகள் நாளை மற்றும் நாளை மறுதினம் நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெறவுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நாளை மாலை இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் மட்டக்களப்பில் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதில் கலந்து கொள்ள உள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டம் காலி சமனல விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

அரசாங்க எழுதுவினைஞர் சங்கம் மற்றும் ஏனைய தொழிற்சங்கங்கள் நடத்தும் மே தினக் கூட்டங்கள், நாளை மறுதினம் கொழும்பில் இடம்பெறவுள்ளன.

வரி செலுத்து நடைமுறை குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டுமென்று பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

வரி செலுத்தும் நடைமுறையை கிரமமாக முன்னெடுப்பதன் மூலம், நாட்டு மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

எமது நிலையத்தில் இடம்பெற்ற சுபாரதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

வரி செலுத்தும் நடைமுறை குறித்து மக்கள் மத்தியில், குறைந்தளவு தெளிவே காணப்படுகின்றது. இதன் காரணமாக, பல்வேறு அரசியல் குழுக்கள் வரி தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி, அவர்களை தவறான வழியில் இட்டுச் செல்வதாக அவர் மேலும் கூறினார்.

அரசாங்கம் பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் சுகாதாரம், கல்வி உள்ளிட்ட வசதிகளுக்காக வரி அறவிடப்படுகின்றது. இதன் காரணமாக, வரிப் பணத்தை செலுத்துவதற்கு மக்கள் முயற்சிக்க வேண்டுமென்றும் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார்.

விளையாட்டுத் துறை அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவியிலிருந்து இடைநிறுத்தம்.

விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவரைப் பதவியில் இருந்து இடைநிறுத்துமாறு விளையாட்டுத் துறை மற்றும் மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அமைச்சின் செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இன்று ஆரம்பமாக உள்ள, தெற்காசிய மெய்வாண்மை விளையாட்டுப் போட்டியில், கலந்து கொள்ளும் வீர - வீராங்கனைகள் மற்றும் விளையாட்டு ஆலோசகர்களுக்குத் தேவையான தங்குமிட வசதிகளை உரிய முறையில் செய்து கொடுப்பதற்கு, விiளாயட்டுத்துறை அமைச்சு தவறியிருந்தமையே இதற்கான காரணமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹவாய் தீவுகளில் 6.9 றிக்டர் அளவிலான நிலநடுக்கம்.

ஹவாய் தீவுகளில் 6.9 றிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க புவிச் சரிதவியல் அமைப்புத் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மண்சரிவுகள் பல இடம்பெற்றுள்ளன. சுமார் 1500 வீடுகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. மின்விநியோகமும் தடைப்பட்டுள்ளது. இந்தத் தீவுகளுக்கு அருகாமையிலுள்ள எரிமலை சீற்றத்தினால் கடந்த மாதம் பெரும் ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக இதுவரையில் 11 நிலநடுக்கங்கள் பதிவாகியிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த வருடம் டோஹா - கட்டாரில் இடம்பெறவுள்ள சர்வதேச மெய்வாண்மை விளையாட்டுப் போட்டித் தொடரில் மாற்றம்.

அடுத்த வருடம் கட்டார் - டோஹாவில் இடம்பெறவுள்ள சர்வதேச மெய்வாண்மை விளையாட்டுப் போட்டித் தொடரில் காலையில் நடத்தப்பட இருந்த போட்டிகள் சில குறிப்பிட்ட நேரத்தில் நடத்தப்பட மாட்டாது என்று சர்வதேச மெய்வாண்மை சம்மேளனம் இன்று அறிவித்துள்ளது. வெப்ப காலநிலையைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 400 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியையும், நள்ளிரவில் மரதன் போட்டியொன்றையும் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சர்வதேச மெய்வாண்மை வெற்றிக் கிண்ணப் போட்டி அடுத்த வருடம் செப்டெம்பர் மாதம் 28ம் திகதி முதல் ஒக்டோபர் 6ம் திகதி வரையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 1500 மீற்றர், 800 மீற்றர் ஓட்டப் போட்டிகளை நள்ளிரவில் நடத்தப்பட உள்ளன.

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட இருக்கும் அபிவிருத்தி திட்டங்கள் பற்றி கண்டறிவதற்காக ஜப்பான் பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளார்கள்

ஜப்பான் பிரதமர் ஷின் சோ அபேயின் விசேட ஆலோசகர் கலாநிதி  ஹிரோத்தோ இசூமி தலைமையிலான பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளார்கள். அவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று ஜனாதிபதி வாசஸ்தலத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்தின்போது

Read more...

அரசாங்கம் ஆரம்பித்துள்ள அபிவிருத்தி திட்டங்களின் நன்மைகள் விரைவில் மக்களைச் சென்றடையும் என்று பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார்

அரசாங்கம் ஆரம்பித்துள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அபிவிருத்தியின் நன்மைகளை துரிதமாக மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வது இலக்காகும் என்றும் பிரதமர் கூறினார். மில்லெனிய பிரதேச செயலகத்தில்; புதிய கேட்போர்கூடக் கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதமர் உரையாற்றினார்.

மனிதர்களுக்கும் - யானைகளுக்கும் இடையிலான மோதல்களுக்கு தீர்வு காண நடவடிக்கை.

மனிதர்களுக்கும் - யானைகளுக்கும் இடையிலான மோதல்களுக்கு நிலையான தீர்வை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். யானைகளின் பாதுகாப்பு பற்றியும் கவனம் செலுத்தப்பட இருக்கிறது. வனசீவராசிகளின் செயற்பாடுகளுக்கு தடையை ஏற்படுத்தக் கூடாதென்று அவர் வலியுறுத்தினார். வனசீவராசி அமைச்சராக கடமைகளை ஆரம்பித்ததன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

இலங்கைக்கும் - சிங்கப்பூருக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் உண்மை நிலை பற்றி அமைச்சர் மலிக் சமரவிக்ரம விளக்கம் அளித்துள்ளார்

இலங்கைக்கும் - சிங்கப்பூருக்கும் இடையிலான சுதந்திர வர்த்தகம் பற்றி கூட்டு எதிர்கட்சி முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை அமைச்சர் மலிக் சமரவிக்ரம நிராகரித்துள்ளார். இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என்றும் அமைச்சர் கூறினார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில்  அவர் கருத்து வெளியிட்டார். பூகோள பொருளாதாரத்துடன் இலங்கையை தொடர்புபடுத்துவது இதன் இலக்காகும். இந்த ஒப்பந்தத்திற்காக அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவி;;த் திட்டத்தின் கீழ் இலங்கையில் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவி;;த் திட்டத்தின் கீழ் இலங்கையில் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் துரிதப்படுத்தப்பட்டு;ள்ளன. இந்த செயல்திட்டங்களின் மொத்தப் பெறுமதி 360 கோடி டொலர்களுக்கும் அதிகமாகும். தற்சமயம் பிலிப்பீன்ஸ் தலைநகர் மெனிலாவில் இடம்பெற்றுவரும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 51ஆவது வருட பூர்த்தி நிகழ்வில் இலங்கை சார்பில் கலந்து கொண்ட நிதி மற்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அங்கு உரையாற்றும் போதே இந்த விடயங்களை தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி கடன் வசதிகளை வழங்கியுள்ளது. இலங்கை மக்களின் வறுமை ஒழிப்பு, பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் போன்ற செயல்திட்டங்களுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளது.

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி செயலகத்தின் பணிக்குழுத் தலைவர் கலாநிதி ஐ.கே.மஹாநாம, அரச - மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் பி.திஸாநாயக்க ஆகியோர் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி செயலகத்தின் பணிக்குழுத் தலைவர் கலாநிதி ஐ.கே.மஹாநாம, அரச - மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் பி.திஸாநாயக்க ஆகியோர் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் இவர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு வழங்கப்பட்டது.

இலங்கை முதலீட்டு சபை திட்டத்தின் கீழ் எம்.ஜி சுகர் தனியார் நிறுவனம் பொறுப்பேற்றுள்ள கந்தளாய் சீனி தொழிற்சாலைக்கு சொந்தமான இயந்திரங்களையும், கட்டடத்தையும் வழங்குவதற்காக இவர்கள் இருவரும் 54 கோடி ரூபாவை லஞ்சமாகக் கோரியிருந்தார்கள். இந்தத் தொகையை பத்து கோடி ரூபா வரை குறைவாகக் காண்பித்து முற்பணமாக இரண்டு கோடி ரூபாவை பெற்றுக் கொண்டதாக நிறுவனத்தின் தலைவர் கே.டி.நடராஜா லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டார்கள். கொழும்பில் உள்ள பிரதான ஹொட்டல் ஒன்றில் லஞ்சப் பணம் வழங்கப்பட்டதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்கள்.

மரக்கறி பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதில் அமைச்சர் சரத் அமுனுகம கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார்.

மரக்கறி பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதில் அமைச்சர் சரத் அமுனுகம கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார். பொலன்னறுவை, அனுராதபுரம் மற்றும் தம்புள்ளை ஆகிய பிரதேசங்களில் மரக்கறி பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உடனடியாக தீர்த்துவைக்க அமைச்சர் அமுனுகம நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் அடிப்படையில், விவசாயிகளின் விளைச்சலுக்கு உத்தரவாத விலையில் பொருட்களை கீல்ஸ் மற்றும் கார்கில்ஸ் புட்சிற்றி நிறுவனங்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விற்பனை தொடர்பில் உள்ள சிக்கல்களையும் தீர்த்து வைக்க அமைச்சர் அமுனுகம தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் விசேட பேச்சுவார்;த்தை ஒன்று இடம்பெற்றது.

கடந்த மூன்று வருடங்களில் அரசாங்கம் பல வெற்றிகளை அடைந்திருப்பதாக பிரதி அமைச்சர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார்.

நாட்டுக்காக பல்வேறு வெற்றிகளை கடந்த மூன்று ஆண்டுகளில் வென்றெடுக்க அரசாங்கத்தால் முடிந்ததாக பிரதி அமைச்சர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இன்று காலை இடம்பெற்ற சுபாரதி நிகழ்ச்சியில் அவர் கருத்து வெளியிட்டார்.

அரசாங்கம் தற்சமயம் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்துள்ளது. இதன் போது உள்நாட்டு கட்டுமாணத்துறையினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றமை சிறப்பம்சமாகும். ஊடக சுதந்திரம் உயர்ந்தபட்ச அளவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களுக்கு கடந்த ஆட்சிக் காலத்தில் உயிர் அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டதாக பிரதி அமைச்சர் கூறினார்.

கடந்த அரசாங்கத்தின் மீது ஏற்பட்டிருந்த அதிருப்தி காரணமாக நாட்டு மக்கள் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நல்லாட்சி அரசாங்கத்தை ஏற்படுத்தினார்கள். மக்களின் பெரும்பாலான எதிர்ப்பார்ப்புக்களை நிறைவேற்ற அரசாங்கம் எதிர்ப்பார்த்திருந்தாலும், அதுபற்றி மக்களுக்கு சரியான தகவல்கள் சென்றடையவில்லை என்று பிரதி அமைச்சர் ஜே.சி அலவத்துவல கூறினார்.

வட இந்தியாவில் சூறாவளி தாக்கத்தினால் குறைந்தது 125 பேர் உயிரிழந்துள்ளனர்.

வட இந்தியாவில் சூறாவளி தாக்கத்தினால் குறைந்தது 125 பேர் உயிரிழந்துள்ளனர். கடும் காற்று, மின்னல் மற்றும் தூசு படிந்த காற்றோட்டத்தினால் பல கிராமங்கள் சேதமடைந்துள்ளன. கட்டடங்களின் சுவர்கள் இடிந்து வீழ்ந்ததில் பலர் காயமடைந்துள்ளனர். 20 வருடங்களுக்குப் பின்னர் இடம்பெற்ற இந்தப் பாரிய அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களி;ன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று உத்தரப் பிரதேஷ் மாநிலத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்து;ளளார்.