Sat02232019

Last updateTue, 20 Nov 2018 3pm

Latest News

கர்நாடகா ஆளுநர் பிஜேபியை ஆட்சி அமைக்க அழைத்தமை குறித்து சட்ட வல்லுனர்கள் மத்தியில் வாதப் பிரதிவாதங்கள்.


கர்நாடகா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கு பாரதீய ஜனதாக் கட்சிக்கு அழைப்பு விடுத்ததன் மூலம், மாநில ஆளுநர் சட்டத்தை மீறியிருக்கிறாரா என்ற கேள்வி தலைதூக்கியுள்ளது. காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி அமைத்திருந்தன. அந்தக் கூட்டணியை விடுத்து ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் வாஜ்பாயி வாலா பிஜேபியின் மாநில தலைவர் எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இது குறித்து சட்ட வல்லுனர்கள் மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருப்பதாக ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதன் பிரகாரம் இன்று காலை 9.30ற்கு எடியூரப்பா பதவி ஏற்பாரென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் சுற்றுத்தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை அணிக்கு வெற்றி.

இந்தியன் பிரிமியர் லீக் சுற்றுத்தொடரின் 50ஆவது போட்டி நேற்று மும்பையில் இடம்பெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியும். கிங்ஸ் லெபன் பஞ்சாப் அணியும் மோதின. மும்பை வீரர்கள் 3 ஓட்டங்களால் வெ;ற்றியீட்டினார்கள். முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 8 விக்கட் இழப்பிற்கு 186 ஓட்டங்களை எடுத்தது. பஞ்சாப் அணி 5 விக்கட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையில், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. சென்னை சுப்பர் கிங்ஸ் 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

கிளிநொச்சி மாவட்டப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய கொரியா உதவுகிறது.


கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளை கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்திற்கு தென்கொரியா உதவுகிறது. நிதி உதவியின் பெறுமதி ஆயிரத்து 200 மில்லியன் ரூபாவாகும். மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைக் கட்டடங்கள் அபிவிருத்தி செய்யப்படுவதோடு, விசேட வகுப்பறையும் நிர்மாணிக்கப்பட இருக்கின்றன

தென்பகுதியில் பரவும் வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை.

தென்;மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் காய்;சiலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை விசேட வைத்தியர்கள் குழு மேற்கொண்டு வருகிறது. சிறு பிள்ளைகளை நோய்த் தொற்றுக்களில் இருந்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும். நோய்க்கான அறிகுறிகள் காணப்படுமாயின் நோயாளர்களை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அமைச்சர் கேட்டுள்ளார்.

தனியார் பஸ் வேலை நிறுத்தம் இடம்பெறுமாயின் அதற்கு முகம் கொடுக்க தயார் என இலங்கை போக்குவரத்து சபையும், ரெயில்வே திணைக்களமும் அறிவித்துள்ளன.

தனியார் பஸ் வேலை நிறுத்தம் இடம்பெறுமாயின் அதற்கு முகம் கொடுக்க தயார் என இலங்கை போக்குவரத்து சபையும், ரெயில்வே திணைக்களமும் அறிவித்துள்ளன. பஸ் கட்டண அதிகரிப்பு போதுமானதாக இல்லை என்று கூறி சில பஸ் சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.


போக்குவரத்து சபையின் சாரதிகளினதும், நடத்துனர்களினதும், விடுமுறை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை போக்குவரத்து சபையின் சாரதிகளினதும், நடத்துனர்களினதும், விடுமுறை இரத்துச் செய்யப்பட்டுள்ளது. பயனிகளின் தேவைக்கு அமைவாக வழமையான நாட்களை விட கூடுதலான பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று இலங்கை போக்குவரத்துசபை அறிவித்திருக்கிறது.

மலேசியாவின் முன்னாள் பிரதிப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்

மலேசியாவின் முன்னாள் பிரதிப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மலேசியாவின் மன்னர் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கி சில நாட்களுக்குப் பின்னர் இந்த விடுதலை இடம்பெற்றிருக்கிறது. மஹ்திர் முஹம்மதின் நெருங்கிய ஆதரவாளராக இருந்த அன்வர் இப்ராஹிம் ஊழல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுக்களுக்காக 20 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதன் மூலம் அவருக்கு மீண்டும் அரசியலில் நுழைவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

தனியார் பஸ் சங்கம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், அந்த நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு சுமார் ஆயிரத்து 500 பஸ் வண்டிகளும், மேலதிக புகையிரத சேவைகளும் தயார் நிலையில் உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஆகக்குறைந்த பஸ் கட்டணம் 10 ரூபாவாக இருப்பதுடன் 6 தசம் ஐந்து சதவீதத்தினால் கட்டணத்தை மறுசீரமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, அதற்கு சமமான வகையில் பஸ் கட்டணத்தை மறுசீரமைப்பதற்கான அமைச்சரவை ஆவணம் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் நேற்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

Read more...

கண்டி மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற இன வன்முறை சம்பவங்கள் காரணமாக சேதமடைந்த வியாபார நிலையங்களை மீள கட்டியமைப்பதற்கு இரண்டு வீத குறைந்த வட்டியுடன் கூடிய கடன் வசதிகளை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவித் திட்டத்தின் கீழ் மன்னாரில் காற்றாலை மூலம் 100 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் விசேட திட்டம் குறித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.

சர்வதேச தேரவாத பௌத்த பல்கலைக்கழக சங்கத்தின் ஐந்தாவது சர்வதேச மாநாடு எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற இன வன்முறை சம்பவங்கள் காரணமாக சேதமடைந்த வியாபார நிலையங்களை மீள கட்டியமைப்பதற்கு இரண்டு வீத குறைந்த வட்டியுடன் கூடிய கடன் வசதிகளை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த கடன் வசதிகளின் உச்சவரம்புத் தொகை ஒரு மில்லியன் ரூபாவாகும்;.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் கயந்த கருணாதிலக்க இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

சமுர்த்தி பயனாளிகளை பலப்படுத்த வேண்டுமாயின், முதலில் சமுர்த்தி உத்தியோகத்தர்களை வலுப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் பி ஹரிஸன் தெரிவித்தார்

சமுர்த்தி பயனாளிகளை பலப்படுத்த வேண்டுமாயின், முதலில் சமுர்த்தி உத்தியோகத்தர்களை வலுப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் பி ஹரிஸன் தெரிவித்தார். சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். இன்று காலை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சுபாரதி நேரடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

Read more...

உருளைக்கிழங்கு, வெங்காய உற்பத்தியாளர்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் பற்றி ஆராய்வதற்கான குழு நியமனம்

வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்படவுள்ளது. இதற்கென இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார தலைமையிலான குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

Read more...

மீனவர்களுக்கான எரிபொருள் மானியம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் அமுலாகிறது

மீனவர்களுக்கான எரிபொருள் மானியம் இம்மாதம் 18ஆம் திகதி முதல் அமுலாகும் என்று அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார். இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று தாக்கல் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Read more...

தரம் 13 வரை உறுதிப்படுத்தப்பட்ட கல்வி வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் அடுத்த மாதம் ஆரம்பம்

தரம் 13 வரை உறுதிப்படுத்தப்பட்ட கல்வித் திட்டத்தின் இரண்டாம் கட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கமைய, 150 பாடசாலைகளை சேர்ந்த 14 ஆயிரம் மாணவர்களுக்கு தொழில்சார் பாடவிதானத்தில் இணைந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். கடந்த வருடம் மே மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதற்கட்ட வேலைத்திட்டத்தின் கீழ் 42 பாடசாலைகளை சேர்ந்த இரண்டாயிரத்து 400 மாணவர்கள் தொழில்சார் பாடங்களை கற்றுவருகிறார்கள். இதற்குத் தேவையான இரண்டாயிரத்து 400 ஆசிரியர்களும் இணைத்துக்

Read more...

நாட்டின் பல பகுதிகளிலும் துண்டிக்கப்பட்டுள்ள மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை

நாட்டின் பல பகுதிகளிலும் தடைப்பட்டுள்ள மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கக்கூடிய வலுசக்திகள் அமைச்சு அறிவித்துள்ளது. பியகமவிலிருந்து பன்னிப்பிட்டிய வரையிலான மின்பிறப்பாக்கி பாதையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறினால் ஸ்ரீ ஜயவர்தனபுரக் கோட்டை, தெஹிவளை, இரத்மலானை, பன்னிப்பிட்டிய ஆகிய இடங்களுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

புதிதாக நான்கு வர்த்தக வலயங்களும் மூன்று சுற்றுலா வலயங்களும் அமைக்கப்படவுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு

நாட்டில் அடுத்த வருடம் நான்கு சுற்றுலா சுதந்திர வர்த்தக வலயங்களும் மூன்று சுற்றுலா வலயங்களும் ஸ்தாபிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வெலிகம, களுத்துறை, பிங்கிரிய, ஹம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் சுதந்திர வர்த்தக வலயங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற அரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நான்காயிரத்து 511 பேருக்கான நியமன கடிதம் வழங்கும் நிகழ்வில் அவர் உரையாற்றினார். அரச சேவையில்; இணைந்து கொள்வோர் நிர்வாக செயற்பாடுகளில் அன்றி மக்கள் சேவைக்காகவே சேர்ந்து கொள்கின்றார்கள் என்று பிரதமர் கூறினார்.

அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையிலான சிறந்த இணைப்பை ஏற்படுத்துவது அரச அதிகாரிகளின் பொறுப்பாகும். அரச துறையை போன்று தனியார் துறையிலும் விவசாயம், கடற்றொழில், சுயதொழில் ஆகிய துறைகளிலும் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் இலக்காகும் என்றும் பிரதமர் கூறினார்.

மக்களிடமிருந்து திரட்டப்படும் வரியில் இருந்து 15 இலட்சம் அரச ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெற்ற ஆறு இலட்சம் பேருக்கு சம்பளம் வழங்கப்படுவதாக நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

புற்று நோய்காக வழங்கப்படும் மருந்து வகைகளின் விலைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கை

 
புற்று நோய்காக வழங்கப்படும் மருந்து வகைகளின் விலைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கை எதிர்வரும் தினங்களில் மேற்கொள்ளப்படும் என்று சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். 
 
இதேபோன்று தனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் கட்டணங்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். 
 
எமது நிலையத்தில் இடம்பெற்ற சுபாரதி நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்து கொண்டார். 
 
புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 15 இலட்சம் ரூபா வரை செலவு வரையறுக்கப்பட்டிருந்தது. இந்த வரையறை தற்பொது நீக்கப்பட்டுள்ளது. 
 
புற்று நோயாளர்கள் இறப்பது நோயினால் அல்ல நோய்க்கான சிகிச்சைக்கு செலவிடுவதற்கு பணம் இல்லாமையே ஆகும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார். 
 
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அபெக்ஸா வைத்தியசாலையின் பணிப்பாளர் வில்பிரட் குமாரசிறி கருத்து தெரிவிக்கையில், கடந்த காலத்தில் நோயாளர் ஒருவருக்கு மருந்து ஊசி ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. 
 
இருப்பினும் இதற்கான சட்ட திட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. நோயாளருக்கு நிதி வரையறை இன்றி சிகிச்சை வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார். 
 
கடந்த காலங்களில் புற்று நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்து ஊசிக்காக வருடாந்தம் ஆயிரத்து 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது. 
 
இருப்பினும் கடந்த வருடத்தில் இதற்காக இரண்டாயிரத்து 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதாக பணிப்பாளர் கூறினார்.

 

இலங்கை - ஈரான் நாடுகளுக்கு இடையில் இருதரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்து

 
ஈரான் மற்றும் இலங்கைக்கு இடையில் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் தொடர்பில் இருதரப்பு உடன்படிக்கைகள் பல கைச்சாத்திடப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹானி ஆகியோர் இதில் கைச்சாத்திட்டுள்ளார். 
 
இருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஈரான் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று காலை ஈரான் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதாக விசேட பிரதிநிதி ரஷான் கொடிதுவங்கு தெரிவித்தார். ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் நோக்கம் ஈரான் மற்றும் இலங்கைக்கு இடையில் பொருளாதாரம் மற்றும் வர்த்தக தொடர்புகளை மேம்படுத்துவதே நோக்கமாகும். 
 
ஈரான் முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடுகள் மேற்கொள்வதை ஊக்குவிப்பது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார். அந்நாட்டு முதலீட்டு சபை ஏற்பாடு செய்துள்ள முதலீடு மற்றும் வர்த்தக மாநாட்டில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார்.

 

 

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஆராயும் அலுவலகம், பிரதேச மட்டத்தில் பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்ளும் பணிகளை ஆரம்பித்துள்ளது. அந்த வகையில், மன்னார் மாவட்டத்து மக்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்ளும் பணிகள் நாளைய தினம் ஆரம்பமாகும்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஆராயும் அலுவலகம், பிரதேச மட்டத்தில் பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்ளும் பணிகளை ஆரம்பித்துள்ளது. அந்த வகையில், மன்னார் மாவட்டத்து மக்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்ளும் பணிகள் நாளைய தினம் ஆரம்பமாகும். காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப அங்கத்தவர்கள், சிவில் சமூக அங்கத்தவர்கள் மற்றும் பிரதேச நிர்வாக அதிகாரிகளிடமும் தகவல்கள் பெற்றுக் கொள்ளப்படும். இதுபோன்ற அலுவலகக் கிளைகள், அடுத்துவரும் சில வாரங்களுக்குள் மாத்தறை, திருகோணமலை, முல்லைத்தீவு, கண்டி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் ஸ்தாபிக்கப்பட்டு, அந்தப் பிரதேச மக்களின் கருத்துக்களும் வினவப்படும்.

18 வயதிற்குக் குறைந்த நபர்களின் சேமிப்புக் கணக்கின் மீது எதுவித வரியும் அறவிடப்படவில்லை என்று அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

18 வயதிற்குக் குறைந்த நபர்களின் சேமிப்புக் கணக்கின் மீது எதுவித வரியும் அறவிடப்படவில்லை என்று அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், நாட்டில் அபிவிருத்தி அடையாத கிராமங்களை அடையாளம் கண்டு, அவற்றை விருத்தி செய்யும் நோக்கில் விசேட வேலைத்திட்டம் ஒன்று எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திலிருந்து ஆரம்பமாகும் என்று குறிப்பிட்டார். கிராமப் புரட்சி என்று அந்தத் திட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் இந்தத் திட்டத்திற்கென மூவாயிரம் கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை மறுசீரமைப்பின் மூலம் திறைசேரியால் ஐயாயிரத்து 500 கோடி ரூபாவை சிக்கனப்படுத்த முடிந்துள்ளது. இந்தத் தொகையே நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றது எ;ன்று அவர் குறிப்பிட்டார்.

எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து பஸ் கட்டணங்களை மறுசீரமைப்பது குறித்து ஆராய்வதற்கு விசேட புத்திஜீவிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து பஸ் கட்டணங்களை எவ்வாறு மறுசீரமைப்பது என்பது பற்றி ஆராயப்படவுள்ளது. இது தொடர்பாக ஆராய்வதற்கு புத்திஜீவிகள் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு எதிர்வரும் திங்கட்கிழமை கூடி ஆராயும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

கட்டணங்களை மாற்றும் தீர்மானத்தை மேற்கொள்கின்ற அதிகாரம் இந்தக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை பஸ் கட்டணங்களை அதிகரிப்பது குறித்து எதுவித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என்று திரு ஹேமச்சந்திர வலியுறுத்தினார். இந்த விசேட குழுவில் மொரட்டுவை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள,; வரவு செலவுத்திட்ட திணைக்கள அதிகாரிகள், தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்கள அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் நுகர்வோர் அதிகாரசபை உத்தியோகத்தர்களும் உள்ளடங்குகின்றனர்.

தேசிய நல்லிணக்க மற்றும் ஒருமைப்பாட்டு இராஜாங்க அமைச்சராக ஏ.எச்.எம்.பௌஸி நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய நல்லிணக்க மற்றும் ஒருமைப்பாட்டு இராஜாங்க அமைச்சராக ஏ.எச்.எம்.பௌஸி நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் இன்று காலை ஏ.எச்.எம்.பௌஸி பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

அதேவேளை, ஜனாதிபதி சட்டத்தரணி ஆரிய பண்டார ரெக்கவ ஊவா மாகாணத்தின் ஆளுநராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாவலபிட்டிய புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் நேற்று நள்ளிரவில் இடம்பெற்ற சம்பவம் குறித்து புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் கவலை வெளியிட்டுள்ளார்.

கொழும்பு – பதுளை இரவு நேர தபால் புகையிரதம் மற்றும் பதுளை – கொழும்பு இரவுவேளை தபால் புகையிரதம் நேற்று நள்ளிரவு நாவலபிட்டிய புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் நிறுத்தப்பட்டதனால், பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் குறித்து தாம் கவலை அடைவதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் எஸ்.எம்.அபேவிக்ரம தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு அடிப்படை காரணம் என்ன என்பது குறித்து இப்பொழுது விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகளிடம் விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. மலையக புகையிரத சேவை இப்பொழுது வழமை நிலைக்கு திரும்பியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.