Fri11162018

Last updateTue, 13 Nov 2018 1pm

Latest News

குடிவரவு குடியகல்வு உத்தியோத்தர்களின் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி கவனம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கை குடிவரவு குடியகழ்வு உத்தியோகத்தர்கள் சங்கம் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் குடிவரவு குடியகழ்வு உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டது. இவை குறித்து ஜனாதிபதி தீவிர கவனம் செலுத்தினார். அடுத்த வரும் நாட்களில் உரிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கட்டம் கட்டமாக தீர்வு பெற்றுத்தரப் போவதாக அவர் உறுதியளித்தார்.

குடிவரவு குடியகழ்வு சேவையை அபிவிருத்தி செய்வதற்கான எதிர்கால நடவடிக்கை பற்றியும் நேற்றைய சந்திப்பில் ஆராயப்பட்டது. இந்த உத்தியோத்தர்கள் அற்றும் சேவைகளை ஜனாதிபதி பாராட்டிப் பேசினார்.

கிரிக்கெட் வீரர் தனஞ்சய சில்வாவின் தந்தையான தெஹிவளை - கல்கிஸ்ஸ மாநகர சபையின் உறுப்பினர் சுட்டுக் கொலை


நேற்றிரவு இரத்மலானை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலியானதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் 8.30 அளவில் இடம்பெற்றது. காயமடைந்த மூவரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்கள். ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் 62 வயதான ரஞ்சன் சில்வா என்பது கண்டறியப்பட்டுள்ளது. திரு.சில்வா இரத்மலானை – கல்கிஸ்ஸ மாநகர சபையின் அங்கத்தவராவார். இவர் கிரிக்கெட் வீரர் தனஞ்சய சில்வாவின் தகப்பனார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து இலங்கை அணியின் கரீபியின் சுற்றுத்தொடரிலிருந்து விலகுவதாக தனஞ்சய சில்வா அறிவித்துள்ளார்.

துப்பாக்கி சூட்டுச் சம்பவத்திற்கான காரணமோ, சந்தேகநபர்கள் பற்றிய விபரங்களோ இதுவரை கண்டறியப்படவில்லை. கல்கிஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை நடத்துகிறார்கள்.

சகல இலங்கையர்களுக்கும் அகில காப்புறுதி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப் போவதாக சுகாதார அமைச்சர் தெரிவிப்பு


இலவச சுகாதார சேவைகளின் கீழ் சகல இலங்கையர்களுக்கும் அகில காப்புறுதி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப் போவதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனராட்ன தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெறும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் 71 ஆவது அமர்வில் சுகாதார அமைச்சர் உரையாற்றினார். இந்த அமர்வு கடந்த 21ம் திகதி ஆரம்பமானது. இது 28ம் திகதி வரை இடம்பெறும்.

இந்த அமர்வில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், சுகாதார சேவையில் சீர்திருத்தங்களை மேற்கொண்டு அதனை முன்னேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.

தொற்று நோய்களையும் தொற்றா நோய்களையும் கட்டுப்படுத்தி, முதுமை அடையும் சனத்தொகை - உளவியல் சுகாதாரம் - புற்றுநோய் முதலான சவால்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சீரற்ற காலநிலையினால் 19 மாவட்டங்களுக்கு தாக்கம் - 38 ஆயிரம் பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் இதுவரை எட்டுப் பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அனர்த்தங்களினால் இதுவரை ஏழு பேர் காயமடைந்திருக்கிறார்கள். அடைமழை காரணமாக 19 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 38 ஆயிரத்து 46 பேர் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் ஆறாயிரத்து 90 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். தொள்ளாயிரத்து 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருக்கின்றன. 19 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. மூன்று வர்த்தக நிலையங்களும், பிரதான ஐந்து உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் இடங்களும் சீரற்ற காலநிலையினால் பாதிப்பிற்குள்ளாகி இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

Read more...

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படையினர் முன்வந்துள்ளார்கள்

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள எட்டு மாவட்டங்களில் கடற்படையின் உயிர்ப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 38 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கமான்டர் தினேஷ் பண்டார தெரிவித்துள்ளார். வளல்லாவிட்ட, கலவான, நிக்கவரட்டிய, ஆனமடுவ, கிரிதலே ஆகிய பிரதேசங்களில் போக்குவரத்து பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள மக்களுக்காக கடற்படையினர் படகு மூலம் போக்குவரத்து சேவையை ஆரம்பித்துள்ளார்கள்.

Read more...

சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் எந்தவொரு தொழில்வாண்மையாளருக்கும் அநீதி இழைக்கப்பட மாட்டாது என பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் எந்தவொரு தொழில்வாண்மையாளருக்கும் அநீதி இழைக்கப்பட மாட்டாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் தொழில் வாய்ப்புக்கள் வெளிநாட்டவர்களுக்கு கிடைக்காது என்றும் பிரதமர் வலியுறுத்தினார். இலங்கை பொறியியல் நிறுவகம், இலங்கை கட்டட வடிவமைப்பாளர்

Read more...

கிராமிய குளங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை.

கிராமிய குளங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் மறுசீரமைப்பு பணிகளை வலுவாக முன்னெடுப்பது அவசியம் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். மகாவலி அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது ஜனாதிபதி கருத்து வெளியிட்டார்.

புhடசாலை மாணவர்களின் விஞ்ஞான அறிவை மேம்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்.

விஞ்ஞான அறிவை மேம்படுத்துவதற்கான புதிய வேலைத்திட்டத்தை கல்வி அமைச்சு ஆரம்பித்துள்ளது. அடுத்த மாதம் முதல் இந்த வேலைத் திட்டம் அமுல்படுத்தப்பட இருக்கிறது.

Read more...

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவ ஊழியர் குழாம் பிரதம அதிகாரி ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவ ஊழியர் குழாம் பிரதம அதிகாரி ஜெனரல் விஜின் ராவட், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு இன்று காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது. இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் இராணுவ புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக் கொள்வது தொடர்பாகவும் இந்தப் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டது.

பயங்கரவாதத்தால் அழிவடைந்த நாட்டை மீளக் கட்டியெழுப்புவதே யுத்த வீரர்களுக்கு வழங்கக்கூடிய கௌரவமாகும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


பயங்கரவாதத்தால் அழிவடைந்த நாட்டை மீளக் கட்டியெழுப்புவதே யுத்த வீரர்களுக்கு வழங்கக்கூடிய கௌரவமாகும் என்று பிரதி அமைசசர் கருணாரட்ன பரணவிதான வலியுறுத்தினார்.

இன்று காலை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சுபாரதி நேரடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே பிரதி அமை;சசர் இதனைத் தெரிவித்தார். 30 வருடகால பயங்கரவாதத்தை முடிவிற்குக் கொண்டுவர உயிர் தியாகம் செய்த யுத்தவீரர்களுக்கு இந்த நாடு முழுமையான கௌரவத்தை வழங்கியுள்ளது. யுத்த வீரர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இடம்பெறக்கூடிய எந்தவொரு செயல்பாட்டிற்கும் அரசாங்கம் இடம் கொடுக்காது. பயங்கரவாத யுத்தம் முடிவடைந்ததும் நாட்டை மீளக் கட்டியெழுப்புவது தொடர்பில் அனைவரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் குறிப்பி;ட்டார். யுத்தம் முடிவடைந்த பின்னரும் இதுவிடயம் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தவில்லை என்றும் அவர் குறிப்பி;ட்டார்.

2020ஆம் ஆண்டளவில் இலங்கையின் மீள்சக்தி பிறப்பாக்கி மூலம் மொத்த மின் உற்பத்தியை 35 வீதத்தால் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பளாபிட்டிய தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டளவில் இலங்கையின் மீள்சக்தி பிறப்பாக்கி மூலம் மொத்த மின் உற்பத்தியை 35 வீதத்தால் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பளாபிட்டிய தெரிவித்துள்ளார். இலங்கையில் மீள் சக்தி பிறப்பாக்கல் முயற்சிகளை துரித கதியில் முன்னெடுப்பதற்கான அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார். எதிர்ப்பார்த்த மழை பெய்யாத காலத்தில் மீள் சக்தி பிறப்பாக்கி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார். இன்று அனுராதபுரம் ஜயஸ்ரீ மஹாபோதி புனித ஸ்தலத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

2018 சிறுபோகத்தின் போது பெரிய வெங்காயச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் விவசாயிகளுக்கு பல நிவாரண உதவிகளை விவசாயத்துறை அமைச்சு வழங்கவுள்ளது.

2018 சிறுபோகத்தின் போது பெரிய வெங்காயச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் விவசாயிகளுக்கு பல நிவாரண உதவிகளை விவசாயத்துறை அமைச்சு வழங்கவுள்ளது. அந்த வகையில் இம்முறை சிறுபோகத்தின் போது, விவசாயிகளுக்கு வெங்காய விதைகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சு நான்கு கோடி 70 லட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளது. ஒரு ஏக்கருக்கு ஒன்பதாயிரம் ரூபா தொடக்கம் 40 ஆயிரம் ரூபா வரை பெறுமதி கொண்ட விதை நிவாரண உதவிகளை அமைச்சு விவசாயிகளுக்கு வழங்கவுள்ளது.

அனர்த்தத்தை முகங்கொடுக்கத் தயாராதல் என்ற தலைப்பிலான விசேட வேலைத்திட்டம் இன்று காலை காலி மாவட்டத்தில் ஆரம்பமானது.

தென்மேற்கு பருவப்பெயர்ச்சிக் காலநிலை தீவிரம் பெறுவதால் நிகழக்கூடிய அனர்த்தங்களின் பாதிப்புக்களைத் தணிப்பதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக இடர்காப்பு முகாமைத்துவத்திற்குப் பொறுப்பான அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அனர்த்தத்தை முகங்கொடுக்கத் தயாராதல் என்ற தலைப்பிலான விசேட வேலைத்திட்டம் இன்று காலை காலி மாவட்டத்தில் ஆரம்பமானது. நாட்டின் 10 மாவட்டங்களில் அமுலாகும் இயற்கை அனர்த்த ஒத்திகைத் திட்டத்தின் இரண்டாவது நிகழ்ச்சி இன்று காலி மாவட்டத்தில் அமுலானது. இங்கு வெள்ள மற்றும் மண்சரிவு அபாயம் உள்ள 10 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 60 கிராமங்களில் ஒத்திகை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, நேற்று காலி மாவட்ட செயலக அலுவலகத்தில் வெள்ள அனர்த்தத்தை சமாளிக்கக்கூடிய ஒத்திகை நிகழ்ச்சி இடம்பெற்றது. அரச அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும். களுத்துறை மாவட்டத்திலுள்ள 50 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலிருந்து 50 ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டார்கள்.

இதற்காக பேரீடருக்கு முன்னர் தயார் நிலை என்ற தொனி;ப்பொருளில் வேலைத்திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் 22ம் திகதி தொடக்கம் ஜுன் மாதம் 3ஆம் திகதி வரை அமுலாக்கப்படும். இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று காலி மாவட்டத்தில் ஆரம்பமானது.

இந்தக் காலப்பகுதியில் பருவப்பெயர்ச்சி காலநிலையாக அமைவதால், பெரிதும் பாதிக்கப்படக்கூடிய பிரதேசங்களை இனங்கண்டு இதற்குரிய வேலைத்திட்டங்களை அமுலாக்கப் போவதாக அமைச்சர் குறிப்பிட்டார். அமைச்சர் துமிந்த திஸாநாயக்க நீர்ப்பாசனம், நீர்வள மற்றும் இடர்காப்பு முகாமைத்துவ அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றினார்.


ஏதிர்வரும் 22;ஆம் திகதி தொடக்கம் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை தீவிரம் பெறுவதால் அடைமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே.எச்.பிரேமலால் தெரிவித்தார். இந்தக் காலப்பகுதியில் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஏற்படலாமென்றும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஆசிரி கருணாவர்தனவும் செய்தியாளர் மாநாட்டில் தகவல் அறிவித்தார். நாட்டின் மலைப்பாங்கான பிரதேசங்களில் அடை மழைபெய்யலாம். இந்தப் பிரதேசங்களில் வாழும் மக்கள் கவனமாக இருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டார். மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய 10 மாவட்டங்களில் 15 ஆயிரம் குடும்பங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இந்தக் குடு;மபங்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் ஊடகங்களில் அறிவிக்கப்படும் மண்சரிவு
அபாய எச்சரிக்கைகளை அனுசரித்து நடவடிக்கை வேண்டுமென திரு.கருணாவர்தன கோரிக்கை விடுத்தார்.

இடர் நிலைமைகள் பற்றி இடர்காப்பு முகாமைத்துவ நிலையத்திற்கு தொலைபேசி மூலம் அறிவிக்க முடியும். அழைக்க வேண்டிய இலக்கம் 117 என்பதாகும். இதுதவிர, 0112-136-136, 079-117-117, 0702-117-117 ஆகிய இலக்கங்களையும் தொடர்பு கொள்ள முடியும்.

மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக்கின் ஆடம்பர பொருட்கள் மற்றும் பெருந்தொகை பணத்தை விசேட சுற்றிவளைப்பின் போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக்கின் ஆடம்பர பொருட்கள் மற்றும் பெருந்தொகை பணத்தை விசேட சுற்றிவளைப்பின் போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். முன்னாள் பிரதமருடன் தொடர்புடைய சொத்துக்கள் மற்றும் பெருந்தொகையான வெளிநாட்டு நாணயத் தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சொத்துக்கள் கைப்பற்றப்பட்டன. ஊழல் மற்றும் மோசடி காரணமாக முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் கடந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தார்.

நேற்று நள்ளிரவு தொடக்கம் திட்டமிட்டிருந்த வேலைநிறுத்தத்தை நடத்தப் போவதில்லை என்று அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சம்மேளனம் அறிவிப்பு.

நேற்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவிருந்த வேலைநிறுத்தம் கைவிடப்பட்;டதாக பிரதியமைச்சர் அசோக அபேசிங்ஹ தெரிவித்துள்ளார்.

பஸ் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. பஸ் உரிமையாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பான யோசனை எதிர்வரும் 22ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. அமைச்சரவையின் அனுமதி கிடைத்த தினத்தில் இருந்து உரிய யோசனையை அமுல்படுத்த எதிர்பார்ப்பதாகவும் பிரதியமைச்சர் அசோக அபேசிங்ஹ கூறினார்.

அரசாங்கம் 12.5 சதவீத பஸ் கட்டண அதிகரிப்பிற்கு இணக்கம் தெரிவித்ததாக அகில இலங்கை பஸ் உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்குத் தெரிவித்தார்.
ஏற்கனவே அமுல்படுத்த திட்டமிட்டிருந்த வேலைநிறுத்தத்தைக் கைவிட்டதாகவும் அவர் கூறினார்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் புதிய கட்டண அதிகரிப்பு அமுலுக்கு வரவிருக்கிறது. பிரதியமைச்சர்களான லசந்த அழகியவன்ன, அசோக அபேசிங்ஹ ஆகியோருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது.

கலாவௌ உடவளவ நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு – மீனவர்களுக்கு எச்சரிக்கை - இன்றும் பல இடங்களில் அடைமழை.

நாட்டின் பல பாகங்களிலும் பெய்துவரும் அடைமழை காரணமாக உடவளவ நீர்த்தேக்கத்தின் ஐந்து வான்கதவுகளும், கலாவௌ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் திறந்து வி;டப்பட்டுள்ளதாக இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இந்த நீர்த்தேக்கங்கள் சார்ந்த நீரோட்டங்களுக்கு அருகில் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டுமென நிலையத்தின் அதிகாரிகள் ஆலோசனைகள் வழங்கியுள்ளார்கள்.

இன்றும் நாட்டின் பல பாகங்களில் மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதுபற்றிய அறிவித்தல்களை தொடரும் வானிலை செய்திகளில் கேட்கலாம்.

மேலும் இரண்டு லட்சம் பேருக்கு சமுர்த்தி அனுகூலங்கள்.

இலங்கையில் இருந்து வறுமையை முற்றாக ஒழித்துக்கட்டும் வேலைத்திட்டத்தின் கீழ் மேலும் இரண்டு லட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி அனுகூலங்களை வழங்குவதென அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசியல் கட்சிப் பேதமின்றி பயனாளிகளை தெரிவு செய்யப் போவதாக அமைச்சர் பி.ஹரிஸன் தெரிவித்துள்ளார். சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் சார்ந்த 22 தொழிற்சங்க அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் அவர் உரையாற்றினார்.

சமூக வலுவூட்டல் வேலைத்திட்டத்தில் காலத்திற்குப் பொருத்தமான மாற்றங்களை அறிமுகம் செய்து வறுமையை ஒழிப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும். நிவாரணம் வழங்கும் திட்டத்தை சீராக்கி, அதில் அரசியல் மயமாக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஹரிஸன் மேலும் தெரிவித்தார்.

கர்நாடகா ஆளுநர் பிஜேபியை ஆட்சி அமைக்க அழைத்தமை குறித்து சட்ட வல்லுனர்கள் மத்தியில் வாதப் பிரதிவாதங்கள்.


கர்நாடகா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கு பாரதீய ஜனதாக் கட்சிக்கு அழைப்பு விடுத்ததன் மூலம், மாநில ஆளுநர் சட்டத்தை மீறியிருக்கிறாரா என்ற கேள்வி தலைதூக்கியுள்ளது. காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி அமைத்திருந்தன. அந்தக் கூட்டணியை விடுத்து ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் வாஜ்பாயி வாலா பிஜேபியின் மாநில தலைவர் எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இது குறித்து சட்ட வல்லுனர்கள் மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருப்பதாக ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதன் பிரகாரம் இன்று காலை 9.30ற்கு எடியூரப்பா பதவி ஏற்பாரென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் சுற்றுத்தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை அணிக்கு வெற்றி.

இந்தியன் பிரிமியர் லீக் சுற்றுத்தொடரின் 50ஆவது போட்டி நேற்று மும்பையில் இடம்பெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியும். கிங்ஸ் லெபன் பஞ்சாப் அணியும் மோதின. மும்பை வீரர்கள் 3 ஓட்டங்களால் வெ;ற்றியீட்டினார்கள். முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 8 விக்கட் இழப்பிற்கு 186 ஓட்டங்களை எடுத்தது. பஞ்சாப் அணி 5 விக்கட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையில், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. சென்னை சுப்பர் கிங்ஸ் 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

கிளிநொச்சி மாவட்டப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய கொரியா உதவுகிறது.


கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளை கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்திற்கு தென்கொரியா உதவுகிறது. நிதி உதவியின் பெறுமதி ஆயிரத்து 200 மில்லியன் ரூபாவாகும். மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைக் கட்டடங்கள் அபிவிருத்தி செய்யப்படுவதோடு, விசேட வகுப்பறையும் நிர்மாணிக்கப்பட இருக்கின்றன

தென்பகுதியில் பரவும் வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை.

தென்;மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் காய்;சiலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை விசேட வைத்தியர்கள் குழு மேற்கொண்டு வருகிறது. சிறு பிள்ளைகளை நோய்த் தொற்றுக்களில் இருந்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும். நோய்க்கான அறிகுறிகள் காணப்படுமாயின் நோயாளர்களை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அமைச்சர் கேட்டுள்ளார்.