Wed04242019

Last updateSun, 21 Apr 2019 12pm

Latest News

பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் இன்று தெரிவு செய்யப்படவுள்ளார்

பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு இன்று பிற்பகல் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

பிரதி சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Read more...

இலங்கையின் மொத்த வெளிநாட்டு ஒதுக்கம் இந்த ஆண்டில் தொள்ளாயிரத்து 50 கோடி அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது

நாட்டின் வெளிநாட்டு நாணய ஒதுக்கம் இந்த வருட இறுதியில் தொள்ளாயிரத்து 50 கோடி அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கும் என்று இலங்கை மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. நாட்டின் வெளிநாட்டு ஒதுக்கம் தற்சமயம் 770 கோடி அமெரிக்க டொலர்களாகும்.

இதேவேளை, இலங்கை பொருளாதாரத் துறையில் அடைந்துள்ள முன்னேற்றங்களில் சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளது.

தபால் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்று நள்ளிரவு முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது

தபால் மற்றும் தொலைத்தொடர்பாடல் சங்கம் முன்னெடுக்கும் இந்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று நள்ளிரவு முடிவடையும் என சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.கே.காரியவசம் தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்க நடவடிக்கை முடிவடைந்தவுடன் தபால் விநியோகப் பணிகள் துரிதப்படுத்தப்படவிருக்கின்றன. தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரிதமான முறையில் தீர்வு வழங்கப்படும் என தபால்துறை அமைச்சர் உறுதியளித்ததைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

விவசாய அபிவிருத்தி தேசிய சட்டமூலம் வெளியிடப்பட்டுள்ளது

விவசாய அபிவிருத்தி தொடர்பான தேசிய சட்டமூலம் வெளியிடப்பட்டுள்ளது. விவசாயத்துறையின் சுபீட்சத்திற்காக முழுமையான தேசிய கொள்கை தயாரிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஒத்துழைப்புடன் இது தயாரிக்கப்பட்டுள்ளது. சட்ட மூலம் அமைச்சர் மஹி;ந்த அமரவீரவிடம் நேற்று கையளிக்கப்பட்டது. இந்த தேசிய கொள்கை சட்டமூலம் அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.

Read more...

குவாத்தமாலா எரிமலையில் காணாமல் போனவர்களை தேடிக்கண்டுபிடிக்கும் முயற்சி

குவாத்தமாலாவில் நேற்று முன்தினம் நிகழ்ந்த பயங்கரமான எரிமலைக் குமுறலைத் தொடர்ந்து காணாமல் போனவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்தப் பணிகளில் தீயணைப்புப் படைவீரர்களுக்கு முப்படையினர் உதவி வருவதாக பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது. ஃபுவெகோ என்ற எரிமலையில் இருந்து வீசியெறியப்பட்ட எரிகற்களும், புகையும் தொலைதூரத்தில் இருந்த கிராமங்களிலும் அழிவை ஏற்படுத்தியுள்ளன.

Read more...

இன்று உலக சுற்றாடல் தினம் - வாழ்க்கை முறையை மாற்றுவதன் அவசியத்தை வலியுறுத்தும் ஜனாதிபதி மற்றும் பிரதமர்

சுற்றாடல் மாசடைவதால் உயிர்கள் மீது தொடுக்கப்படும் அச்சுறுத்தலைப் புரிந்துகொண்டு சுற்றாடல் நேய வாழ்க்கை முறையை அனுசரிப்பதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

Read more...

சுற்றாடல் பாதுகாப்பு சகலரதும் தட்டிக்கழிக்க முடியாத பொறுப்பு – ஜனாதிபதி

சுற்றாடலைப் பாதுகாக்கும் முயற்சியில் தமது செயற்பாடுகளை ஒரு தினத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் வருடம் பூராவும் முன்னெடுக்க திடசங்கற்பம் பூணுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

Read more...

மட்டக்களப்பில் மனித – யானை நெருக்கடிக்குத் தீர்வு – அமைச்சர் சரத் பொன்சேகா உறுதி

மட்டக்களப்பு மாவட்டத்தில் தீவிரம் பெற்றுள்ள காட்டு யானைகளின் தொல்லைக்கு தீர்வு காணும் நோக்கில் தொப்பிகலையை அண்டிய பகுதியில் மின்சார வேலிகள் அமைக்கப்படும்.

இதற்கு மூன்று கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகனேரி பிரதேசத்திற்கு சென்று நிலைமையை நேரில் கண்டறிந்த பின்னர் அவர் கருத்து வெளியிட்டார்.

Read more...

சுற்றாடல் பாதுகாப்பு வேலைத்திட்டத்தினை பொறுப்புடன் நிறைவேற்ற அர்ப்பணிக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.


ஒரு தினத்திற்கு மாத்திரம் வரையறுக்காமல் வருடம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் தொடர்ச்சியாக அமுலாகும் வேலைத்திட்டத்துடன் சுற்றாடல் பாதுகாப்புக்கான தமது பொறுப்பை நிறைவேற்ற அர்ப்பணிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைவரையும் கேட்டுள்ளார். இது ஒரு தரப்புக்கு மாத்திரம் உரியது அல்லவென்றும் அவர் கூறினார்.

அரசியல்வாதிகள் அரச அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் உட்பட அனைத்து பிரஜைகளும் இதில் இணைந்து கொள்வது அவசியமாகும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

கேகாலையில் இன்று இடம்பெற்ற சர்வதேச சுற்றாடல் தின நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றினார்.

இன்று இடம்பெறும் சுற்றாடல் அழிவினால் நாளையதினத்தில் பிள்ளைகளுக்கு வாழ்வது தொடர்பான பிரச்சினை உருவாகும். அபிவிருத்தி அடைந்த நாடுகள்; சுற்றாடல் அழிவினால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சுற்றாடல் கட்டமைப்பை பாதுகாப்பதற்கென உடனடியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியமாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தென் மாகாணத்தில் பரவிய இன்புளுவென்வா ஏ வைரஸ் பற்றிய அநாவசிய அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை இல்லை என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.


தென் மாகாணத்தில் பரவிய இன்புளுவென்சா ஏ வைரஸ் காய்ச்சல் பற்றி அநாவசிய அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை இல்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அஜித் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நோயை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் மாகாண சுகாதார அதிகாரிகள் உட்பட துறைசார் முக்கியஸ்தர்களை இணைத்து நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

சுகாதார அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் டொக்டர் அஜித ஜாசிங்க கருத்து வெளியிட்டார்.

காய்ச்சல் பற்றி அறிந்து நோயாளர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது அவசியமாகும். இதற்கு தேவையான மருந்துகளும் உபகரணங்களும் உரிய வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளன.

கம்புருபிட்டிய ஆதார வைத்தியசாலையில் மே மாதம் முதலாம் திகதி முதல் 20 நோயாளர்கள் தங்கி சிகிச்சை பெற்றுள்ளதோடு இந்த எண்ணிக்கை தற்சமயம் பத்து வரை குறைவடைந்துள்ளது.

குவத்தமாலாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால் 25 பேர் பலி

மத்திய அமெரிக்க நாடான குவத்தமாலாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால் 25 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

எரிமலையில் இருந்து சாம்பல் வெளியேறியமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கானவர்கள் இதனால் காயமடைந்துள்ளார்கள்.

எரிமலை தீக் குழம்பு வெளியேற ஆரம்பித்துள்ளது. இந்தப் பிரதேசத்தில் இருந்து மூவாயிரத்து 100 இற்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மக்கள் நேயமிக்க பாரிய சக்தியாக கட்டியெழுப்ப போவதாக பொதுச் செயலாளர் தெரிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மக்கள் நேயமிக்க பாரிய சக்தியாக கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாக கட்சியின் புதிய பொதுச் செயலாளர் கலாநிதி ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.

Read more...

15 வயதை பூர்த்தி செய்த அனைத்து பிள்ளைகளும் தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது

15 வயதை பூர்த்தி செய்த அனைத்து பிள்ளைகளும் தேசிய அடையாள அட்டையை பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த வயதெல்லை முன்னர் 16 ஆக அமைந்திருந்தது. அதனை 15 வயதாக குறைத்த பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஆட்பதிவு திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மார்ச் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் குறிப்பிட்ட பாடசாலைகளின் அதிபர்கள் ஊடாக விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட வேண்டும் என்று அறிவித்திருந்த போதிலும், இன்னும் பல விண்ணப்பங்கள் தினமும் கிடைக்கப் பெற்ற வண்ணமுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் இயக்க மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் அர்சன இலிப்பிட்டிய தெரிவித்தார்.

நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்யும் நெல் அரிசியாக்கப்பட்டதன் பின்னர் பி.எம்.பி.ரைஸ் என்ற பெயரில் சந்தைக்கு விற்பனை செய்யவுள்ளது

நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்யும் நெல் அரிசியாக்கப்பட்டதன் பின்னர் பி.எம்.பி.ரைஸ் என்ற பெயரில் சந்தைக்கு விற்பனை செய்யப்படுவதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் உபாலி முகட்டி தெரிவித்துள்ளார். சபையின் புதிய தலைவராக இன்று கடமைகளை ஆரம்பித்ததன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார். வரலாற்றில் நெல் சந்தைப்படுத்தல் சபை கூடுதலான நெல்லை தற்போதை அரசாங்கத்தின் ஆட்சியில் கொள்வனவு செய்திருப்பதாகவும் சபையின் தலைவர் கூறினார்

நீதித்துறையைச் சேர்ந்த எவரும் அரசியலின் பின்னால் செல்லும் பின்புலம் உருவாகக்கூடாது என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்

சட்டவாட்சியை உறுதிப்படுத்தும் கொள்கையின் கீழ் நீதித்துறையைச் சேர்ந்த எவரும் அரசியலின் பின்னால் செல்லும் பின்புலம் உருவாக்கப்படக் கூடாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். வத்தளை நீதிமன்றக் கட்டடத் தொகுதியைத் திறந்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றினால். நீதித்துறையில் மாத்திரமன்றி, சகல துறைகளையும்

Read more...

தெற்காசியாவின் வறுமை மட்டம் குறைந்த நாடு இலங்கையாகும் என நிதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்

தெற்காசியாவின் வறுமை மட்டம் குறைந்த நாடு இலங்கையாகும் என்று அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 2012ஆம் ஆண்டில் ஆறு தசம் 7 சதவீதமாகக் காணப்பட்ட வறுமை மட்டம் தற்சமயம் நான்கு தசம் 4 சதவீதம் வரை குறைவடைந்திருக்கின்றது. நிலைபெறானா அபிவிருத்தி இலக்கின் கீழ் 2030ஆம் ஆண்டளவில் நாட்டில் இருந்து வறுமையை முற்றாக ஒழிப்பது அரசாங்கத்தின் இலக்காகும் என்று அவர் கூறினார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செயலமர்வு ஒன்றில் அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றினார். சமுர்த்தி வேலைத்திட்டத்தினால் எதிர்பார்க்கப்பட்ட இலக்கை அடைந்துள்ள கொள்ள முடியவில்லை. வறுமை அரசியல் வாதிகளின் ஆயுதமாக மாறியிருக்கின்றமை இதற்கான காரணமாகும். சமுர்த்தி அலுவலகம் அரசியல் வாதிகளின் அலுவலமாக மாறியிருக்கின்றது. சமுர்த்தி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை சீர்குலைவதற்கும் இது காரணமாக அமைந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்

நடுத்தர வருமானம் ஈட்டுவோருக்கான கடன் திட்டம் மேலும் விஸ்தரிக்கப்படவுள்ளது

நடுத்தர வருமானம் ஈட்டுவோருக்கான உத்தேச வீடமைப்புக் கடன் திட்டத்தை தொடர்ந்தும் விஸ்தரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. முதற்தடவையாக வீடொன்றைக் கொள்வனவு செய்யும் நடுத்தர வருமானம் பெறுபவர்களுக்கு தனியார் துறையிடம் இருந்தும் வீடுகளைக் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்;பை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. 45 வயதிற்கு உட்பட்ட 25 ஆயிரம் வேலையில்லாப் பட்டதாரிகள் பயிற்சியின் பின்னர் அரச சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட இருக்கின்றார்கள்.

வாக்காளர் தினம் நாளை கொண்டாடப்படுகின்றது

வாக்காளர் தினம் நாளை கொண்டாடப்படுகின்றது. வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கு தகுதியுள்ள சகல பிரஜைகளினதும் வாக்குரிமைகளைப் பாதுகாப்பது இந்தத் தினத்தின் நோக்கமாகும். வாக்களிப்பதற்கான வயதெல்லை உட்பட அதனுடன் தொடர்புடைய விடயங்கள் ஜூன் மாதம் முதலாம் திகதி தீர்மானிக்கப்படுகின்றமையினால் வாக்காளர் தினம் அன்றைய தினத்தில் கொண்டாடப்படுகின்றது. இம்முறை தேசிய வாக்காளர் தின நிகழ்வு நாளை கேகாலையில் இடம்பெறவுள்ளது. வாக்குரிமையிலேயே உண்மையான ஜனநாயகம் தங்கியிருக்கிறது என்பது இதன் தொனிப்பொருளாகும்.

பாடசாலைகளின் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல்

பாடசாலைகளின் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் ஏற்றுக்கொள்ளப்பட இருக்கின்றன. ஜூன் மாதம்
30 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம். அடுத்த வருடம் தரமொன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான புதிய சுற்றுநிரூபம் சகல பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் பாடசாலைகள் தொடர்பான பணிப்பாளர் கமனி பெரேரா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குக் கிடைத்த சர்வதேச அங்கீகாரத்தை வரவேற்கும் பாராளுமன்ற சபாநாயகர்.


சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு ஏ தரத்திலான அங்கீகாரம் கிடைத்திருப்பதை அரசியல் அமைப்பு சபையின் தலைவரும், சபாநாயகருமான கரு ஜயசூரிய வரவேற்றுள்ளார்.

இந்த அங்கீகாரம் இலங்கைக்கு நாகரீகமாக கௌரவமான தேசமாக மகுடம் சூட்டியுள்ளதென சபாநாயகர் குறிப்பிட்டார். இலங்கையின் சமூகம் சம நீதியையும், சமத்துவத்தையும் மதிக்கும் சுதந்திர சமூகமாக திகழ்கிறது என்பது சர்வதேச சமூகத்தில் ஊர்ஜிதமாகியுள்ளது. இது தேசம் என்ற ரீதியில் இலங்கைக்குக் கிடைத்த பெரும் வெற்றியென திரு கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு ஏ தரத்திலான அங்கீகாரம் பெற்றமை குறித்து ஆணைக்குழுவின் தலைவி பேராசிரியை தீபிக்கா உடுகமவும் வரவேற்று பேசினார். ரைட்ஸ்நௌ என்ற மனித உரிமைகள் நிறுவனத்தைச் சேர்ந்த சட்டத்தரணி பிரபோத ரட்நாயக்க கடந்த காலத்தில் இலங்கை பி தரத்திலான அங்கீகாரத்தையே பெற்றிருந்தது என்றார்.