Fri02232018

Last updateThu, 22 Feb 2018 8pm

Latest News

வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா நாளை ஆரம்பம்.

வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. இந்தத் திருவிழா தொடர்ந்து இரண்டு நாட்கள் இடம்பெறும். இதற்குரிய சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்;பாண மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாதன் தெரிவித்துள்ளார்.

Read more...

கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டு உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகிறது.

உரிய உள்ளுராட்சி மன்றங்களுக்கு நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் விபரங்களை கட்சிகளின் செயலாளர்கள் அறிவித்திருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் 2ஆம் திகதிக்கு முன்னர் கட்சிகளின் செயலாளர்கள் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தேர்தல்

Read more...

ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டத்தில் இலங்கை வெற்றிகரமான பெறுபேறுகளை அடைந்திருக்கின்றது.

ஊழல் நிலவும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 91 ஆவது இடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டில் இலங்கை 95 ஆவது இடத்தில் இருந்தது.
ஊழலை ஒழிப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளின் வெற்றியாக இதனை கருத முடியும் என்று ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நாஷன் அமைப்பு அறிவித்துள்ளது.

நாட்டிற்குத் தேவையான பொதுமான அரிசி கையிருப்பில் காணப்படுவதாக சதோச, அத்தியாவசியப் பொருட்கள் விற்பனையாளர் சங்கம் என்பன அறிவித்திருக்கின்றன.

பெரும்போக அரிசி தற்சமயம் சந்தைக்குக் கிடைக்கின்றது. இதற்கு மேலதிகமாக இறக்குமதி செய்யப்பட்ட அரிசியும் சந்தையில் காணப்படுகின்றது. இதனால் புதிதாக அரிசி இறக்குமதி செய்யப்பட மாட்டாது என சதோச நிறுவனத்தின் தலைவர் மொஹமட் றிஸ்வான் தெரிவித்துள்ளார். இதேவேளை, இம்முறை பெரும்போகத்தில் 6 லட்சம் ஹெக்டயர் விஸ்தீரணமான நிலப்பரப்பில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.

நாட்டின் அபிவிருத்திப் பணிகளில் உள்ளுர் கட்டடக் கலைஞர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம்.

நாட்டில் இடம்பெறும் அபிவிருத்திப் பணிகளின்போது உள்நாட்டு கட்டட வடிவமைப்பாளர்களுக்கு முதலிடம் வழங்கப்படும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இதற்காக கட்டட வடிவமைப்பாளர்களின் கூடுதலான பங்களிப்புக்களைப் பெற்றுக்கொள்ளவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது என அமைச்சர் கூறினார். இலங்கை கட்டட வடிவமைப்பாளர் நிறுவகத்தின் 35 ஆவது நிறைவாண்டு நிகழ்வில் அமைச்சர் உரையாற்றினார்.

11 பேர் காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படைச் சிப்பாய்க்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டில் 11 பேர் காணாமல்போன சம்பத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான கடற்படைச் சி;ப்பாய் லெப்டினன் கொமாண்டர் சந்தின ஹெட்டியாராச்சிக்கு எதிராக மீண்டும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் லங்;கா ஜயரத்தன இந்த உத்தரவை வழங்கினார். பிடியாணையை ஆங்கில மொழியில் வெளியிடுமாறும், சந்தேக நபர் வெளிநாடு செல்லும்போதோ, நாட்டில் இருந்து வெளியேறும் சந்தர்ப்பத்திலோ அவரைத் தடுத்து வைத்து குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

ஸ்ரீலங்கன் எயார்லையன்ஸ் நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடிகள் பற்றி வலிஅமுன அறிக்கைக்கு அமைவான தீர்மானங்கள் எடுக்கப்படுவதாக அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான சேவையில் இடம்பெற்ற மோசடிகள் பற்றி விசாரணை நடத்திய வலிஅமுன ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் கபிர் ஹாசிம் தெரிவித்துள்ளார். எவ்ஐசிடி அதிகாரிகளும் இது பற்றி விசாரணைகளை ஆரம்பித்திருக்கிறார்கள். இது தொடர்பாக செயற்பட கோப் குழவினருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயார் என்றும் அமைச்சர் கூறினார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெறும் விவாததத்தில் அவர் கருத்து வெளியிட்டார்.
தலைமைத்துவப் பயிற்சி நெறியின்போது பாடசாலை அதிபர் ஒருவர் உயிரிழந்தமை பற்றி விசாரணைகள் இடம்பெறுவதாகவும், இது பற்றி அறிக்கையை கோரியிருப்பதாக அமைச்சர் கூறினார்.

இதேவேளை முன்னாள் அமைச்சர் அமரர் விஷ்வா வர்ணபால, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இலீயன் நாணக்கார தொடர்பான அனுதாப பிரேரணைகளும் இன்று பாராளுமன்றத்தில் கலந்துரையாடப்பட்டன.

இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்றார். பேராசரியர் விஷ்வா வர்ணபால கட்சி பேதமின்றி சமூகத்திற்கு மகத்தான பணிகளை ஆற்றினார் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சைட்டம் மருத்துவ பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவப் பீடத்திற்கு மாற்றம்.

மாலபே சைட்டம் தனியார் கல்விக்கூடத்தில் மருத்துவ கற்கைநெறியை தொடர்ந்த மாணவர்கள் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்படவுள்ளனர்.

நேற்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இது தொடர்பான தீர்மானம் எட்டபட்டதென ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. சட்டமா அதிபர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மருத்துவப்பீட பீடாதிபதி, பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்கள்.

சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் அடிப்படை தகைமைகளை ஆராய்ந்து, அதற்கமைய கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் சேர்த்துக் கொள்வதெனவும் முடிவு செய்யப்பட்டது.

அரசியல் யாப்பின் பிரகாரம் தேசிய அரசாங்க உடன்படிக்கை இன்னமும் செல்லுபடியாவதாக பிரதமர் பாராளுமன்றத்தில் அறிவிப்பு.

தேசிய அரசாங்கம் தொடர்பான உடன்படிக்கை அரசியல் யாப்புக்கு அமைய இன்னமும் செல்லுபடியாக இருக்கிறதென பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த உடன்படிக்கையை இரத்துச் செய்ய வேண்டிய தேவை கிடையாதென பிரதமர் கூறினார். அவர் நேற்று பாராளுமன்றத்தில் விசேட கூற்றை வெளியிட்டு உரையாற்றினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர உரையாற்றுகையில், தமது கூட்டணியும், ஐக்கிய தேசியக் கட்சியும் உடன்படிக்கையில் தொடர்ந்து கடப்பாடு கொண்டிருப்பதாகக் கூறினார்.

தேசிய அரசாங்கத்தின் கால எல்லை பற்றி ஜேவிபியின் தலைவர் அனுர குமார திசாநாயக்கவும் கருத்து வெளியிட்டார். இந்த அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்ட போது, அது இரண்டு வருட காலம் மாத்திரமே செல்லுபடியாகுமென பாராளுமன்றத்தில் கூறப்பட்டது. அதன் பிரகாரம் கடந்த செப்டெம்பர் 2ம் திகதியுடன் உடன்படிக்கை காலாவதியாகிவிட்டது என திரு.திசாநாயக்க கூறினார்.

அதற்கு பதிலளித்த சபை முதல்வர் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கக்கூடிய கட்சியோ கூட்டணியோ அரசாங்கத்தை அமைக்கலாம் என்றார். இந்த அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல சபையில் உடன்படிக்கைகளை சமர்ப்பிக்கத் தேவையில்லை என அவர் கூறினார்.

மக்கள் மீது கூடுதல் தாக்கம் செலுத்தும் திட்டங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணம் ஒதுக்குவது பற்றி பரிசீலனை.

மக்கள் மீது கூடுதல் தாக்கம் செலுத்தக்கூடிய துறைகளை இனங்கண்டு, அவை சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

இது பற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூடுதல் கவனம் செலுத்தியிருப்பதாக அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அவர் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றினார். இந்த மாநாடு நேற்று இடம்பெற்றது.

முன்னைய அரசாங்கம் கட்டுப்பாடுகளின்றி கடன் பெற்றது. ஒரு கடனை மறைத்து இன்னொரு கடனை பெறும் போக்கை முன்னைய ஆட்சியாளர்கள் தொடர்ந்து முன்னெடுத்தார்கள். அந்தக் கடன்களை மீளச் செலுத்தும் கடப்பாடு திறைசேரிக்கு உள்ளதென அமைச்சர் மேலும் கூறினார்.

இலங்கையின் பழங்குடி சமூகத்திற்காக தேசிய வானொலி ஆரம்பித்த பிரத்தியேக வானொலி சேவை எட்டாம் வருடத்தில் கால்பதிப்பு.

இலங்கையில் பழங்குடிகளுக்காக தேசிய வானொலி ஆரம்பித்த தபான ரேடியோ என்ற வானொலி அலைவரிசையின் எட்டாவது ஆண்டு நிறைவு இன்று கொண்டாடப்படுகிறது. முழு தெற்காசிய பிராந்தியத்திலும் ஆதிவாசிகளின் நலன்கருதி இயங்கும் தனியொரு வானொலி அலைவரிசை இதுவாகும். இது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய அலைவரிசையாக இயங்கி வருகிறதென தம்பான ரேடியோவின் கட்டுப்பாட்டாளர் அருனசிறி ஜயவிக்ரம தெரிவித்தார். அலைவரிசையின் ஆண்டு நிறைவை முன்னிட்டு தான தர்ம நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இராமேஸ்வரத்தில் புதிய கட்சியை ஆரம்பித்த கமலஹாஸன், தமது அரசியல் இலட்சியங்கள் குறித்து விபரிப்பு.

நடிகர் கமலஹாஸன் தமது அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார். தமது மக்கள் நீதி மையம் என்ற கட்சி தமிழக அரசியலில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக அமையும் என கமலஹாஸன் கூறினார். தாம் இடதுசாரியா, வலதுசாரியா என்று மக்கள் கேட்கிறார்கள். இதன் காரணமாகவே தமது கட்சிக்கு மையம் என்று பெயரிட்டதாக அவர் குறிப்பிட்டார். இராமேஸ்வரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இல்லத்திலிருந்து வீதி பவனி மூலம் நேற்று அரசியல் பயணத்தை ஆரம்பித்துவைத்து கமலஹாஸன் உரையாற்றினார். இந்த நிகழ்வில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும் பங்கேற்றார்.

அடுத்த மாதம் இடம்பெறும் சுதந்திர கிண்ணக் கிரிக்கட் தொடருக்கான டிக்கட் விற்பனை இன்று ஆரம்பம்.

சுதந்திர வெற்றிக்கிண்ண கிரிக்கட் சுற்றுத்தொடருக்கான டிக்கட் விற்பனை இன்று ஆரம்பமாகிறது. ரசிகர்கள் ஸ்ரீலங்கா கிரிக்கட் தலைமையகத்திலும், ஆர் பிரேமதாஸ சர்வதேச கிரிக்கட் மைதானத்திலும் டிக்கட்டுக்களை கொள்வனவு செய்ய முடியும். இந்த சுற்றுத்தொடர் மார்ச் 6ஆம் திகதி தொடங்குகிறது. இதில் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன. இறுதிப் போட்டி அடங்கலாக ஆறு ரி-20 போட்டிகள் இடம்பெறவுள்ளன. சகல போட்டிகளும் ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறும். இவற்றிற்கான டிக்கட்டுக்கள் 300 ரூபாவிலிருந்து தொடங்கி ஐயாயிரம் ரூபா வரை விலைபோகும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் முன்னேற்றப் பரிசீலனை கூட்டம் ஜனாதிபதி தலைமையில்

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் முன்னேற்ற பரிசீலனைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சு அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சு அமுலாக்கிய திட்டங்களில் முன்னேற்றம் பற்றியும் எதிர்கால திட்டங்கள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டது. மகாவலி வலய விவசாயிகள் அனுகூலம் பெறும் வகையில் திட்டங்களை சீராக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்தில் வறட்சி நிலை ஏற்படலாம். அதன் மீது கவனம் செலுத்தி நீர்த்தேக்கங்களில் உள்ள நீரை முறையாக நிர்வகிக்கும் திட்டங்களை வகுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். மொர-கஹகந்த திட்டத்துடன் இணைந்ததாக மெதிரிகிரிய, பிசோபுர கிராமவாசிகளுக்கு காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கூறினார். மகாவலி அதிகாரசபையின் பொறுப்பில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள கட்டடங்களை முறையாக பயன்படுத்தும் திட்டம் ஒன்றை வகுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

இரு பிரதான கட்சிகளும் உடன்படிக்கையில் கடப்பாடு கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அறிவிப்பு.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர உரையாற்றுகையில், தமது கூட்டணியும், ஐக்கிய தேசியக் கட்சியும் உடன்படிக்கையில் தொடர்ந்து கடப்பாடு கொண்டிருப்பதாகக் கூறினார்.

அரசியல் யாப்புக்கு அமைய தேசிய அரசாங்க உடன்படிக்கை இன்னமும் செல்லுபடியானதென பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவிப்பு.

தேசிய அரசாங்கம் தொடர்பான உடன்படிக்கை அரசியல் யாப்புக்கு அமைய இன்னமும் செல்லுபடியாக இருக்கிறதென பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த உடன்படிக்கையை இரத்துச் செய்ய வேண்டிய தேவை கிடையாதென பிரதமர் கூறினார். அவர் பாராளுமன்றத்தில் விசேட கூற்றை வெளியிட்டு உரையாற்றினார்.

தேசிய நல்லிணக்க வேலைத்திட்டங்கள் அடுத்த இரு வருடங்களில் வலுவாக முன்னெடுக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் தெரிவிப்பு.

தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் முயற்சியில் அரசாங்கம் சரியான பாதையில் பிரவேசித்துள்ளதாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க பணிமனையின் தலைவியும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழி அமைச்சை ஸ்தாபித்தன் மூலம் அரசாங்கம் முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்கள் அமுலாகின்றன. இந்த வேலைத்திட்டங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வலுவாக முன்னெடுத்து செல்லப்படும் என்று திருமதி குமாரதுங்க தெரிவித்தார்.

கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் இடம்பெற்ற சர்வதேச தாய்மொழி தின நிகழ்ச்சியில் அவர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றினார். தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கருமமொழி அமைச்சு, தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க பணியகம், இலங்கை மன்றக் கல்லூரி, பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் ஆலயம் ஆகியவை இணைந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.

அமைச்சர் மனோ கணேசன் உரையாற்றுகையில், இலங்கையில் பல்லின மக்களும் தாம் இலங்கை தேசத்தவர்கள் என்று சிந்தித்து செயற்பட வேண்டுமென்றார்.

தியத்தலாவை பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் வெடிப்புச் சம்பவம் பயங்கரவாத நடவடிக்கை அல்ல என்று இராணுவம் அறிவித்துள்ளது.

தியத்தலாவையில் இன்று பஸ் வண்டியில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம் பயங்கரவாத நடவடிக்கை அல்ல என இராணுவப் பேச்சாளர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். காயமடைந்த 19 பேரில் 12 பேர் இராணுவ வீரர்களாவர்.

Read more...

இலங்கைக்கும், இந்தோனேஷியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் வலுவடைந்துள்ளன.

இலங்கைக்கும், இந்தோனேஷியாவுக்கும் இடையிலான உறவுகள் முன்பை விட அதிகரித்திருப்பதாக இந்தோனேஷியாவின் வீடமைப்பு அமைச்சர் பசோக்கி ஜோனோ தெரிவித்துள்ளார்.

Read more...

சுங்க நடவடிக்கைகளை நவீனமயப்படுத்த அரசாங்கம் தயார்.

உலகின் ஏனைய நாடுகளில் சுங்க நடவடிக்கைகளுடன் தொடர்புபடும் வகையில்; நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதன் மூலம் மக்களுக்கு நம்பிக்கையான சேவையை வழங்க முடியும். தரவுகளை அறிந்து கொள்ளும் நடவடிக்கைகள் காலத்திற்கு ஏற்ற வகையில் புதுப்பிக்கப்படவிருக்கிறது.

உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் வெள்ளிக்கழமை வரை ஏற்றுக் கொள்ளப்படவிருக்கின்றன.

இவ்வருட உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முடிவடையவிருக்கிறது. பாடசாலை மூலமான பரீட்சார்த்திகள், பாடசாலை அதிபர்களின் ஊடாகவும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தனிப்பட்ட ரீதியிலும் விண்ணப்பிக்க வேண்டுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.