Tue11132018

Last updateFri, 09 Nov 2018 4pm

Latest News

இலங்கை வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த மாதம் இலங்கை வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒன்றரை இலட்சத்தை தாண்டியுள்ளது.

கடந்த வருடத்தின் ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது அரை சதவீத வளர்ச்சியாகும் என சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் அறிவித்துள்ளது.

இம்முறை இந்தியா, சீனா, பிரிட்டன், ஜேர்மனி, அவுஸ்திரேலிய ஆகிய நாடுகளிலிருந்து ஆகக் கூடுதலான சுற்றுலா பயணிகள் வருகை தந்திருக்கிறார்கள்.

இந்தப் பயணிகள் மத்தியில் 25 சதவீதமானோர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

உலகின் ஆகவும் பழைமையான குகை ஓவியம் கண்டுபிடிப்பு

உலகின் ஆகவும் பழைமையான குகை ஓவியம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

இந்தோனேஷியாவின் போர்னியோ தீவிலுள்ள குகை ஒன்றிலிருந்து காட்டு எருமை போன்றதொரு உருவதைக் குறிக்கும் செஞ்நிற ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறைந்தபட்சம் 40 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கக் கூடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இது பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளில் உள்ள பிரசித்தி பெற்ற குகைகளில் உள்ள விலங்குகளின் குகை ஓவியங்களுக்கு சமமானதாக காணப்படுகிறது.

ஒரு பகுதி வங்குரோத்து அரசியல்வாதிகள் தமது நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக நாட்டிற்குள் குழப்ப நிலையை ஏற்படுத்த முயன்று வருவதாக பிரபல ஊடகவியலாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

ஒரு பகுதி வங்குரோத்து அரசியல்வாதிகள் தமது நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக நாட்டிற்குள் குழப்ப நிலையை ஏற்படுத்த முயன்று வருவதாக பிரபல ஊடகவியலாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். ஆனால், நாட்டில் தற்சமயம் எதுவித பிரச்சினையும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். மக்களின் அன்றாட வாழ்க்கையை குழப்புவதற்கு சில சக்திகள் முயன்று வருகின்றன. இதுகுறித்து, பொதுமக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும். நாட்டில் தற்சமயம் அமைதியான நிலைமை காணப்படுகிறது. இந்த நிலைமையை சீர்குலைப்பதற்கு எவருக்கும் இடமளிக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டார். இன்று காலை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சுபாரதி நேரடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

இங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், திரு ரணில் விக்ரமசிங்கவின் நிர்வாகத்தின் கீழ் நாட்டில் பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்றன. அரசியல் அமைப்பின்படி, பாராளுமன்றத்தில் உயர்ந்தபட்ச விசுவாசத்தை கொண்ட ஒருவரை பிரதமர் பதவிக்கு நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு முழுமையான உரிமை உண்டு என்று இங்கு உரையாற்றிய சட்டத்தரணி ராஜா குணரட்ன தெரிவித்தார். பாராளுமன்ற பெரும்பான்மை பலத்தை விட, உச்சளவு விசுவாசமே இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. ஜனாதிபதி தமக்கு மிகவும் விசுவாசமான ஒருவரை பிரதமராக நியமிக்க முடியும் என்று அரசியல் அமைப்பில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

விமல் வீரவங்ச வீடமைப்பு பொது வசதிகள் அமைச்சராக பதவியேற்பு.

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச வீடமைப்பு மற்றும் சமூக நலனோம்பு அமைச்சராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இதேவேளை, சர்வதேச வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரான பந்துல குணவர்தன இன்று காலை தமது அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார். நாட்டின் சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்தி, முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் பொருளாதாரத்தை மேலும் பலப்படுத்த முடியும் என்று இங்கு உரையாற்றிய அமைச்சர் தெரிவித்தார்.

பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்பின் 40ஆவது சரத்துக்கு அமைய, புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களின் விடயதான விபரங்கள் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பொலிஸ் திணைக்களமானது, சட்டம், ஒழுங்கு அமைச்சின் கீழ் செயல்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஒருநாள் சர்வதேச போட்டியில் நியூசிலாந்துக்கு வெற்றி.

நியூசிலாந்து கிரிக்கட் அணியின் எமிரேட்ஸ் சுற்றுத்தொடர் பற்றிய விபரங்கள்
நேற்று அபுதாபியில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச போட்டியில் நியூசிலாந்து அணி 47 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. இந்தப் போட்டி மின் விளக்கொளியில் பகலிரவு போட்டியாக நடந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து வீரர்கள் 9 விக்கட் இழப்பிற்கு 266 ஓட்டங்களை எடுத்தார்கள். பாகிஸ்தான் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 48ஆவது ஓவரில் 219 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. நியூசிலாந்தின் சார்பாக ரொஸ் டெயிலர் 80 ஓட்டங்களையும், டொம் லத்தம் 68 ஓட்டங்களையும் பெற்றன

சட்டமா அதிபரை பதவி விலக்கிய அமெரிக்க ஜனாதிபதி.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சட்டமா அதிபர் ஜெஃப் செஷன்ஸை பதவி நீக்கம் செய்துள்ளார். செஷன்ஸின் சேவைகளுக்கு நன்றி தெரிவிப்பதாக ட்ரம்ப் விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்க்கு ரஷ்யா உதவி செய்ததாக பரவலாக குற்றம் சுமத்தப்படுகிறது. இது தொடர்பான விசாரணைகளிலிருந்து சட்டமா அதிபர் விலகியதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி அவரை கடுமையாக விமர்சித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

சபாநாயகருக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு.

தேசிய பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.

சபாநாயகர் ஆரம்பத்தில் புதிய பிரதமரை அங்கீகரித்து, சில தினங்களுக்குள் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டமைக்கு காரணமாக அமைந்த விடயங்களின் அடிப்படையில், முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற சபாநாயகர் அரசியல் யாப்பிற்கு முரணாக, தார்மீக விழுமியங்களை மீறும் வகையில் தன்னிச்சையாக செயற்பட்டு மக்கள் அபிலாஷைகளை மீறுகிறார் என்று தேசிய பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தின் குற்றச்சாட்டாகும்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான செய்திகள் பொய்யானவை என அரசாங்கம் வலியுறுத்தல்.

பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மை கிடையாதென அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், சில குழுக்கள் பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக திட்டமிட்ட ரீதியில் பிரசாரம் செய்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

எனினும், இத்தகைய ஆதாரமற்ற போலி குற்றச்சாட்டை முற்றுமுழுதாக நிராகரிப்பதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றம் அரசியலமைப்பிற்கு உட்பட்டது!

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றம் அரசியலமைப்பிற்கு உட்பட்டது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்த அரசியல் மாற்றத்தைப் பயன்படுத்தி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே தனது நிலைப்பாடு எனவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் அரசியல் தலைமைகள் விட்ட தவறுகளே தமிழ் மக்கள் இன்று எதிர்கொள்ளும் அவலங்களுக்கு காரணம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

நீண்ட கால போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் தேவை தற்போது ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அமைச்சில் இன்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கருத்து வெளியிட்டார்.

அபிவிருத்திகளை யார் முன்னெடுப்பது எனும் இழுபறி நிலையே கடந்த ஆட்சியில் மக்களுக்கு அந்த அபிவிருத்திகள் கிடைக்காமல் போனது என பிரதியமைச்சர் காதர் மஸ்தான் குறிப்பிட்டார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதியும் கலந்து கொண்டு அமைச்சின் எதிர்காலத்திட்டங்கள் தொடர்பில் விளக்கமளித்தார்.

துருக்கியின் புதிய யுகத்தில் அனைத்துத் துறைகளையும் விருத்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி தெரிவிப்பு

துருக்கியின் தற்போதைய புதிய யுகத்தில் அனைத்துத் துறைகளும் விருத்தி காணும் என்று அந்நாட்டு ஜனாதிபதி ரெஸப் தையிப் அர்துகான் தெரிவித்துள்ளார். நேற்று துருக்கியின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியாக பொறுப்பேற்றதான் பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஜனநாயகம், அடிப்படை உரிமைகள், சுதந்திரம், பொருளாதாரம், பாரிய அளவிலான முதலீடு என அனைத்துத் துறைகளும் விருத்தி செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டித் தொடரின் அரையிறுதிப் போட்டித் தொடர் இன்று ஆரம்பம்

உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டித் தொடரின் அரையிறுதி சுற்றுப் போட்டி இன்று ஆரம்பமாகின்றது. பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு 11.30ற்கு ரஷ்யாவின் சென் பீற்றர்ஸ்பர்க் நகரில் ஆரம்பமாகும். 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்தப் போட்டியை பார்வையிட சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது. இம்முறை உலகக் கிண்ணப் போட்டியில் பிரான்ஸ் தோல்வியடையாமல் முன்னோக்கி வந்துள்ளது. தொடரின் அரையிறுதி சுற்றுக்கு பிரான்ஸ் வந்துள்ள ஆறாவது சந்தர்ப்பம் இதுவாகும். இந்தத் தொடரில் சவால் விடுக்கும் அணியாக பெல்ஜியம் அணி இன்று போட்டியிடுகின்றது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் பெல்ஜியம் அணி முதல் தடவையாக உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் இறுதிச் சுற்றுக்கு தெரிவாகும் சந்தர்ப்பத்தை பெறும். இதுவரை நான்கு கோல்களை பெற்றுள்ள பெல்ஜியம் அணி வீரர் ரொமேலு லுக்காலு மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குரோஷியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மற்றைய அரையிறுதிப் போட்டி நாளை நடைபெறும்.

உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டித் தொடரின் மூன்றாம் நிலையை தெரிவு செய்வதற்கான போட்டி எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகும். இறுதிப் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும்.

2050ஆம் ஆண்டளவில் இலங்கையை முழுமையான அபிவிருத்தி மிக்க நாடாக மாற்றி அமைப்பதற்கு தேவையான பின்னணியும், திட்டமும் வகுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு

2050ஆம் ஆண்டளவில் இலங்கையை முழுமையான அபிவிருத்தி மிக்க நாடாக மாற்றி அமைப்பதற்குத் தேவையான பின்னணி மற்றும் திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இது மிகவும் சவால் மிக்க காரியமாகும். பல்வேறு அபிப்பிராயங்களை கொண்டவர்களுடன் மிகவும் பொறுமையுடனும், அவதானமாகவும் இந்த செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

Read more...

தாய்லாந்து பிரதமர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை வருகிறார்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரயூன் ச்சன்-ஓ-ச்சா எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை வரவுள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். வியாழக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை சந்திக்கவுள்ள தாய்லாந்து பிரதமருக்கு அங்கு இராணுவ மரியாதையும், அணிவகுப்பும் வழங்கப்படவுள்ளது.

Read more...

நாட்டில் சட்டவாட்சி சீர்குலைந்திருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் முன்வைத்துள்ள கருத்துக்கு சட்டத்தரணிகள் எதிர்ப்பு

நாட்டின் சட்டவாட்சி சீர்குலைந்திருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் முன்வைத்த கருத்தை சட்டத்தரணிகள் முற்றுமுழுதாக நிராகரித்துள்ளனர்.

Read more...

நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையின் செய்தி குறித்து விரைவில் பாராளுமன்றத்தில் விவாதம்

நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை அண்மையில் வெளிப்படுத்திய கடந்த அரசாங்கத்தின் நிதி மோசடி குறித்து ஜனாதிபதி விசாரணையொன்று மேற்கொள்ளப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் ஜனாதிபதியை கேட்டுள்ளார்.

Read more...

ஆயிரம் குளங்களை அபிவிருத்தி செய்யும் பாரிய வேலைத்திட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை நிக்கவரட்டியில் ஆரம்பம்

ஆயிரம் குளங்கள், ஆயிரம் கிராமங்கள் வேலைத்திட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை நிக்கவரட்டி மஹகிரில்ல, கல்கடவல குளத்தில் ஆரம்பமாகும். விவசாய அமைச்சு நடைமுறைப்படுத்தும் நாம் வளர்த்து, நாம் உண்ணுவோம் என்ற துரித விவசாய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் 18 செயற்றிட்டங்களில் இது முக்கியமானதாகும். அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும். பிரதி அமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்கவும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்.

நாட்டில் உள்ள பழைமைவாய்ந்த பல குளங்கள் உரிய முறையில் நிர்வகிக்கப்படாததால், மிகவும் பாழடைந்த நிலைமையில் காணப்படுகின்றன. இதன்படி, இந்த வருடத்திற்குள் ஆயிரம் குளங்களையும், அந்தக் குளங்களின் கீழ் உள்ள ஆயிரம் கிராமங்களையும் அபிவிருத்தி செய்வது இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும். விவசாயிகள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, குளங்களை புனரமைக்கும் வேலைத்திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்துமாறு மஹிந்த அமரவீர கமநல அபிவி;ருத்தித் திணைக்களத்திற்கு பணிப்புரை வழங்கியுள்ளார். முதற் கட்டமாக 370 குளங்கள் புனரமைக்கப்படும். இந்தப் பணி எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகும். இந்த வேலைத்திட்டத்திற்காக அரசாங்கம் 900 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது.

தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி மீண்டும் ஆரம்பமாகியுள்ளது

தாய்லாந்தில் குகையொன்றில் சிக்கியுள்ள சிறுவர்களுள் மேலும் இருவரை சுழியோடிகள் மீட்டுவந்துள்ளனர். எஞ்சியுள்ள எட்டு சிறுவர்களையும் அவர்களின் உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளரையும் மீட்பதற்கான ஆபத்தான நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 23ஆம் திகதி குகைக்குள் சென்று சிக்கிய சிறுவர்களை ஒன்பது நாட்களுக்குப் பின்னர் மீட்புப் பணியாளர்கள் கண்டுபிடித்தனர். எனினும், தொடர்ந்து குகைக்குள் மழைநீர் பெருகியதால், அவர்களை வெளியே கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. இதனால், சிறுவர்களுக்கு நீச்சலை பழக்கி, வெளியே கொண்டு வருவதற்கு சில மாதங்கள் கூட ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மழை தொடர்ந்து பெய்ததால், நீர் மேலும் பெருகும் ஆபத்தை கருத்திற் கொண்டு சிறுவர்களை மீட்பதற்கு ஆபத்து நிறைந்த நடவடிக்கையை சுமார் 100 சுழியோடிகள் இணைந்து ஆரம்பித்தனர். இதன் மூலம் நேற்று வரை நான்கு சிறுவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை கொழும்பு புறக்கோட்டையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்

புறக்கோட்டை - செட்டியார் தெருவில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் கிருஷ்ணபிள்ளை கிருபாநந்தன் கொல்லப்பட்டுள்ளார்.

நவோதயா கிருஷ்ணா என்று அறியப்பட்ட இவர், கொழும்பு மாநகரசபைக்கு சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்டிருந்தார். இறக்கும் போது அவருக்கு வயது 40. கொழும்பு புறக்கோட்டை ஆண்டிவாழ் தெருவில் பழக்கடை ஒன்றில் இன்று காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த சம்பவம் குறித்து புறக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயிரம் குளங்கள், ஆயிரம் கிராமங்கள் வேலைத்திட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை நிக்கவரட்டியில் ஆரம்பமாகிறது

ஆயிரம் குளங்கள், ஆயிரம் கிராமங்கள் வேலைத்திட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை நிக்கவரட்டியில் ஆரம்பமாகிறது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆரம்ப வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொள்கிறார்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வாரமும் ஒரு கிராமம் அபிவிருத்தி செய்யப்படும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஆயிரம் குளங்கள், ஆயிரம் கிராமங்கள் வேலைத்திட்டத்தை மூன்று ஆண்டுகளில் பூர்;த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், அதனை துரிதமாக நிறைவுசெய்து ஆயிரத்து 500 கிராமங்கள் வரை அதிகரிக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு தாய்லாந்து பிரதமர் பரியுத் ச்சான் ஓ ச்சா இலங்கை வருகிறார்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு தாய்லாந்து பிரதமர் பரியுத் ச்சான் ஓ ச்சா இலங்கை வருகிறார்.

அவர் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களை சந்திப்பார். இலங்கை அரசாங்கத்தின் அழைப்பிற்கு இணங்க, தாய்லாந்து பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்வதாக வெளிவிவகார அமைச்சு கூறுகிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவது இதன் நோக்கமாகும்.